/* */

முழு ஊரடங்கு: ஈரோடு மஞ்சள் மார்க்கெட்டுக்கு விடுமுறை

முழு ஊரடங்கு காரணமாக, ஈரோடு மஞ்சள் மார்க்கெட்டுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

முழு ஊரடங்கு: ஈரோடு மஞ்சள் மார்க்கெட்டுக்கு விடுமுறை
X

ஈரோடில் 4 இடங்களில் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை மஞ்சள் ஏலம் நடக்கிறது. இரு மாதங்களுக்கு முன்னர், மஞ்சள் விலை குவிண்டாலுக்கு ரூ. 10 ஆயிரத்தை தொட்ட நிலையில், தற்போது சராசரியாக குவிண்டாலுக்கு ரூ 8,000 முதல் 9,000 வரை விலை கிடைத்து வருகிறது.

கொரோனா பரவல் உள்ளிட்ட காரணங்களால் மஞ்சள் விலையில் எதிர்பார்த்த ஏற்றம் கிடைக்கவில்லை .தங்களிடம் இருப்பில் உள்ள மஞ்சள் மற்றும் அறுவடை செய்யப்பட்ட புது மஞ்சளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.

தொற்று பரவலை தடுக்க தமிழகத்தில் தற்போது பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக மஞ்சளை அறுவடை செய்தல், அதனை பதப்படுத்துதல், மஞ்சளை விற்பனைக்கும் கிடங்குகளில் இருப்பு வைக்கவும் பாதிப்பு ஏற்படலாம் என அச்சம் விவசாயிடம் ஏற்பட்டுள்ளது.

மஞ்சள் வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில் தற்போது அறுவடை செய்த புதிய மஞ்சளை பாதுகாப்பாக வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மஞ்சள் கிருமி நாசினி என்பதால் மருந்து உற்பத்தி மற்றும் மளிகை தேவைக்கு தொடர்ந்து தடையின்றி அனுப்பி வைக்க வேண்டியுள்ளது.

இந்நிலையில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் இன்று முதல் வரும் வெள்ளிக்கிழமை வரை மஞ்சள் சந்தைக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. அடுத்த வாரம் முதல் மஞ்சள் சந்தைக்கு விலக்கு அளித்து ஏலம் நடை பெற அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கூறினர்.

Updated On: 10 May 2021 11:48 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    பா.ஜ.க அழுத்தம் கொடுத்தும் ராஜினாமா செய்யாதது ஏன்? கெஜ்ரிவால்
  2. தேனி
    தேனியில் ஆட்டு இறைச்சி விலை கிடுகிடு உயர்வு!
  3. தேனி
    ஐந்து நாள் மழை பெய்தும் அணைகளுக்கு நீர் வரத்து இல்லை
  4. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 33 கன அடி அதிகரிப்பு
  5. ஈரோடு
    பவானிசாகர் அணை நீர்மட்டம் 44.50 அடியாக சரிவு
  6. காஞ்சிபுரம்
    கின்னஸ் சாதனை முயற்சியில் ஈடுபட்டுள்ள வங்கி ஊழியர்..
  7. கீழ்பெண்ணாத்தூர்‎
    கீழ்பெண்ணாத்தூர் பகுதியில் அரசு பள்ளி மாணவர்கள் சாதனை
  8. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  9. திருவண்ணாமலை
    கோடை கால இலவச தடகளப் பயிற்சி முகாம்
  10. ஆரணி
    போக்ஸோவில் 20 ஆண்டுகள் தண்டனை பெற்றவா் விடுதலை