/* */

ஈரோட்டில் மளிகை கடைகள் மதியம் 1 மணி வரை மட்டுமே செயல்படும்

ஈரோட்டில் தொடரும் தொற்று பரவல் காரணமாக மளிகை கடைகள் மதியம் 1 மணி வரை மட்டுமே செயல்படும் வியாபாரிகள் அறிவிப்பு என அறிவித்துள்ளனர்.

HIGHLIGHTS

ஈரோட்டில் மளிகை கடைகள் மதியம் 1 மணி வரை மட்டுமே செயல்படும்
X

தமிழகத்தில் கொரோனா 2 -ம் அலை வேகமாக பரவி வந்தது. பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு ஊரடங்கை அமல்படுத்தி அவை நீட்டிக்கப்பட்டு வருகிறது. அத்தியாவசிய தேவையான மளிகை காய்கறி கடைகள் மட்டும் காலை 6 மணி முதல் மதியம் 2 மணிவரை செயல்பட முதலில் அனுமதி அளிக்கப்பட்டது. பின்னர் தொற்றின் வேகம் அதிகரித்ததன் காரணமாக காய்கறி மளிகை கடை செயல்படவும் அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 7ஆம் தேதி முதல் வரும் 14ஆம் தேதி வரை மேலும் ஒரு வாரத்திற்கு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் மளிகை ,காய்கறி, இறைச்சிக் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

ஈரோடு மாவட்டத்தில் தற்போது கொரோனா தாக்கம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. மாவட்டம் முழுவதும் 145 -க்கும் மேற்பட்ட பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக கிராமப்புற பகுதிகளில் கொரோனா தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதையடுத்து மளிகைக் கடைகளின நேரத்தை குறைத்து இயக்க வியாபாரிகள் முடிவு செய்துள்ளனர். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் ஈரோடு மாவட்ட அனைத்து வியாபாரிகள் சார்பில் இன்று முதல் மளிகைக் கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 1 மணிவரை மட்டுமே திறந்திருக்கும் என அறிவித்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் இந்த சங்கங்களில் கீழ் மொத்தம் 20,000 மளிகைக் கடைகள் இயங்கி வருகின்றன.

ஏற்கனவே அந்தியூர், பவானி, சத்தியமங்கலம், கோபி போன்ற பகுதிகளில் உள்ள மளிகைக் கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே திறக்கப்பட்டு வியாபாரம் நடந்து வருகிறது.தொற்றின் தாக்கம் காரணமாக வியாபாரிகள் தாமாகவே முன்வந்து மளிகை கடை நேரத்தை குறைத்து உள்ளனர். அதேபோல் மாநகர் பகுதியில் உள்ள 2250 மளிகைக் கடைகள் இன்று காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே திறந்திருந்தது. 1 மணிக்கு பிறகு அனைத்து மளிகை கடைகளும் அடைக்கப்பட்டன. இது குறித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாவட்ட நிர்வாகிகள் ஈரோடு எஸ்.பி. சசி மோகனிடம் அனுமதி கடிதம் அளித்து உள்ளனர். பொது மக்கள் நலனுக்காகவும், வியாபாரிகளின் நலனுக்காகவும் எடுக்கப்பட்ட இந்த முடிவுக்கு பொது மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில இணைச்செயலாளர் சிவனேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த நடவடிக்கையை பொதுமக்களும் வரவேற்றுள்ளனர்.

Updated On: 9 Jun 2021 1:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?