வழிமுறை பின்பற்றாத அரசு மருத்துவமனைகள்: ஈரோடு கலெக்டரிடம் காங்கிரஸ் கட்சி புகார்

வழிமுறை பின்பற்றாத அரசு மருத்துவமனைகள்: ஈரோடு கலெக்டரிடம் காங்கிரஸ் கட்சி புகார்
X

ஈரோடு கலெக்டர் அலுவலகம் 

அரசு கூறியுள்ள கொரோனா வழிகாட்டுதல்களை, பெரும்பாலான அரசு மருத்துவமனைகள் பின்பற்றுவது இல்லை என, ஈரோடு கலெக்டரிடம் காங்கிரஸ் கட்சியினர் மனு அளித்தனர்.

ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில், மாவட்ட தலைவர் மக்கள் ராஜன் தலைமையில் அக்கட்சியினர், ஈரோடு மாவட்ட கலெக்டர் கதிரவனிடம் மனு ஒன்றை அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:

ஈரோட்டு மாவட்டத்தில் தினந்தோறும் கொரோனா நோய்த்தொற்று அதிகரித்துக் கொண்டேதான் இருக்கிறது. இதற்கான காரணம் குறித்து ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக, 50 நபர்கள் ஆய்வு மேற்கொண்டோம்.

ஆய்வின் போது, தமிழக அரசு கூறியுள்ள வழிகாட்டுதல் முறைகளை பெரும்பாலான அரசு மருத்துவமனைகள் பின்பற்றுவது இல்லை. என்பது தெரிய வந்தது. குறிப்பாக நோய்த்தொற்று பாதித்த ஒருவர் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் போது அவரோடு ஒரு உறவினர் உதவியாளரை அனுமதிக்கிறார்கள்.

அப்படி அனுமதிப்பதால் அந்த உதவியாளர் மருத்துவமனையில் இருந்து மீண்டும் அவரது வீட்டிற்கு செல்லும்போது வீட்டில் இருக்கக்கூடிய நபர்களுக்கு இவர் மூலமாக தொற்று பரவுகிறது, என்பதை தெளிவாக கண்டறிந்தோம். இதனை உடனடியாக மாவட்ட நிர்வாகம் சரி செய்ய வேண்டும்.

தடுப்பூசி போடப்படுவது குறித்து தினம் பத்திரிக்கை வாயிலாக பொதுமக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். கிராமப்புறங்களில் வசிக்கும் பொதுமக்களுக்கு போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். ஒவ்வொரு கொரோனா சிகிச்சை மையத்திலும் வழிகாட்டுதல் குழு அமைக்கப்பட வேண்டும். ஈரோடு மாவட்டத்தில் தமிழக அரசு வழிகாட்டுதல்படி மாவட்ட நிர்வாகம் முழு பலத்தையும் செலுத்தி கொரோனா தொற்றை உடனடியாக குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story
ai as the future