முதல்வரின் திட்டங்களுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு

சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் த.மா.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அறிமுக கூட்டம் ஈரேட்டில் நடைபெற்றது. த.மா.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர் யுவராஜா முனானதாக செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் த.மா. க வுக்கு 6 தொகுதிகளை ஒதுக்கியதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
த.மா.கா சார்பில் இரட்டை இலை சின்னத்தில் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு நான் போட்டியிடுகிறேன். அத்தொகுதியில் அதிமுக மற்றும் தமாகாவினர் அதிமுக கூட்டணியின் வெற்றிக்காக பாடுபடுவார்கள்.
அதிமுக கூட்டணி வெற்றிக் கூட்டணி. மீண்டும் தமிழகத்தின் முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்பார். முதல்வர் அனைத்து குடும்ப தலைவிக்கும் ரூபாய் ஆயிரத்தி ஐநூறு, வருடத்திற்கு ஆறு சிலிண்டர் வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளார். இது பொது மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ளது.
அதுமட்டுமல்லாமல் ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு திட்டங்களை அவர் அறிவித்து செயல்படுத்தினார். எனவே அதிமுக கூட்டணி மகத்தான வெற்றி பெறும். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கை மக்களை ஏமாற்றும் செயலாகும்.
ஏற்கனவே பல்வேறு நல திட்டங்களை அதிமுக அரசு அறிவித்து உள்ளது. அதையே மீண்டும் சொல்வது போல திராவிட முன்னேற்றக் கழகத்தின் அறிக்கை உள்ளது.மக்களை ஏமாற்ற முடியாது. அதிமுக சிறுபான்மையினருக்கு பாதுகாவலராக உள்ளது. எனவே சிறுபான்மை வாக்குகள் அனைத்தும் அதிமுக கூட்டணிக்கு கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
அதிமுக ஈரோடு மாநகர மாவட்ட செயலாளர் கே.வி.ராமலிங்கம், ஈரோடு கிழக்கு தொகுதி அதிமுக எம்எல்ஏ தென்னரசு, முன்னாள் எம்எல்ஏ விடியல் சேகர்,த.மா.க மாவட்ட தலைவர் விஜயகுமார், மாநில துணைத் தலைவர் ஆறுமுகம் உட்பட பலர் உடனிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu