கண் நல விழிப்புணர்வு

கண் நல விழிப்புணர்வு
X
உலக குளுக்கோமா வாரத்தை முன்னிட்டு தி ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனை சார்பில் கண் நலத்தை வலியுறுத்தி மனித சங்கிலி விழிப்புணர்வு.

உலக குளுக்கோமா (கண்ணீர் அழுத்த நோய்) வாரத்தை முன்னிட்டு ஈரோடு தி ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனை மற்றும் ஸ்ரீ வாசவி கல்லூரி இணைந்து மனித சங்கிலி விழிப்புணர்வை இன்று பழைய பாளையத்தில் நடத்தியது.

இந்த விழிப்புணர்வு மனிதச் சங்கிலியை ஈரோடு மெடிக்கல் சென்டர் தலைவர் டாக்டர் முருகன் தொடங்கி வைத்தார்.

தி ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனை மூத்த டாக்டர் முகமது பைசல், சிறப்பு மருத்துவர் விஜயகுமார், மேலாளர் கிஷோர் குமார், பாபு, கண்ணதாசன் மற்றும், ஸ்ரீ வாசவி கல்லூரி மாணவ மாணவிகள் என 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதுகுறித்து டாக்டர் முகமது பைசல் கூறும்போது, 2013ம் ஆண்டில் உலக அளவில் குளுக்கோமா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 64.3 மில்லியனாக இருந்தது. இது 2020 ஆம் ஆண்டில் 80 மில்லியனாக அதிகரித்துள்ளது. 2040 ஆம் ஆண்டில் இது 111.8 மில்லியனாக அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. இந்நோயால் பாதிக்கப்பட்ட 90 சதவீதத்துக்கும் மேற்பட்டோருக்கு இந்நோய் பற்றி தெரியவில்லை. ஆரம்ப நிலையில் இன் நோய் உள்ளதா என்பதை கண்டறிந்து சிகிச்சை எடுத்துக் கொண்டால் பார்வை பறி போவதை தடுக்கலாம். இந்நோயால் 40 வயதிற்கு மேற்பட்டோர் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் 40 வயதிற்கு மேற்பட்டோர் வருடம் ஒருமுறை கண் பரிசோதனை செய்து கொள்வது அவசியம். ஈரோடு தி ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனை சார்பாக பொதுமக்களின் நலனுக்காக மார்ச் மாதம் முழுவதும் இலவச கண் பரிசோதனை மற்றும் ஆலோசனை வழங்கப்படும் என்றார்.

Tags

Next Story
ai solutions for small business