ஈரோடு மேற்கு அதிமுக வேட்பாளர் கே.வி. ராமலிங்கம் தீவிர பிரசாரம்

ஈரோடு மேற்கு அதிமுக வேட்பாளர் கே.வி. ராமலிங்கம் தீவிர பிரசாரம்
X
ஈரோடு மேற்கு சட்டமன்ற தொகுதியின் அதிமுக வேட்பாளர் கே.வி.ராமலிங்கம் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு கேட்டு தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.

ஈரோடு மேற்கு தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் கே.வி.ராமலிங்கத்தை ஆதரித்து, மேட்டுக்கடை, வெள்ளோடு போன்ற பகுதியில் இரட்டை இலை சின்னத்துக்கு த.மா.கா., தலைவர் ஜி.கே.வாசனுடன் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. அப்போது பொதுமக்களிடம் வேட்பாளர் கே.வி.ராமலிங்கம் பேசியதாவது:

தமிழகத்தில் கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் வாங்கிய பயிர் கடன், 12,110 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டு, 16.43 லட்சம் விவசாயிகள் பயன் பெற்றுள்ளனர். இதில், ஈரோடு மாவட்டத்தில், 420 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அதுபோல, 6 பவுனுக்கு குறைவான நகைக்கடன், 16 கோடி ரூபாய்க்கு மேல் ஈரோடு மேற்கு தொகுதியில் தள்ளுபடியாகி உள்ளது.

ஏப்.,1 முதல் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம், 24 மணி நேரமும் தடையின்றி கிடைக்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டு, நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

அத்திக்கடவு அவிநாசி திட்டம், 1,652 கோடி ரூபாயில் அறிவிக்கப்பட்டு, 60 சதவீதத்துக்கு மேல் பணிகள் முடிந்துள்ளது. இத்திட்டம் மூலம், ஏராளமான விவசாயிகள் கோடை காலங்களில் பயன்பெறும் வாய்ப்பு அ.தி.மு.க., அரசால் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதுபோன்ற திட்டங்களை நிறைவேற்ற, அ.தி.மு.க., அரசு தொடர, இரட்டை இலை சின்னத்தில் ஓட்டுப்பதிவு செய்து, என்னை வெற்றி பெற செய்யுங்கள். இவ்வாறு பேசினார்.

Tags

Next Story