ஈரோட்டில் விறுவிறுப்பாக தொடங்கிய வாக்கு எண்ணிக்கை

ஈரோட்டில் விறுவிறுப்பாக தொடங்கிய வாக்கு எண்ணிக்கை
X
ஈரோடு மாவட்டத்திலுள்ள 8 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கி, விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு ,பெருந்துறை ,பவானி, மொடக்குறிச்சி , அந்தியூர், கோபிசெட்டிபாளையம் மற்றும் பவானிசாகர் ஆகிய 8 சட்டமன்ற தொகுதிகளிலும் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.
தபால் வாக்குகள் மற்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான 76.91 சதவீத வாக்குகளை எண்ணும் பணி தொடங்கி இருக்கிறது. மாவட்டத்திலுள்ள 8 தொகுதிகளின் வாக்குகள், இரண்டு இடங்களில் எண்ணப்பட்டு வருகிறது.
ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, பெருந்துறை, பவானி, மொடக்குறிச்சி, அந்தியூர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளின் வாக்குகள் சித்தோடு அரசு சாலை மற்றும் போக்குவரத்து பொறியியல் கல்லூரியிலும், கோபிசெட்டிபாளையம் மற்றும் பவானிசாகர் தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை கோபி கலை அறிவியல் கல்லூரியில் எண்ணப்படுகின்றது.
8 சட்டப்பேரவை தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கைக்கு ஒவ்வொரு தொகுதிக்கும் தலா 4 மேஜைகளில் தபால் ஓட்டுக்களும் 14 மேஜையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான ஓட்டுகளும் எனப்படும். மொத்தம் 112 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் தலா 3 மேஜைகள் என 8 சட்டமன்ற தொகுதிகளுக்கும் 24 மேசைகள் கூடுதலாக இருப்பில் வைக்கப்பட்டுள்ளன.

வாக்கு எண்ணும் பணியில் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கு தலா 17 மேற்பார்வையாளர்கள் , 17 உதவியாளர்கள், 17 பார்வையாளர்கள் என மொத்தம் 408 அலுவலர்கள் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். மேலும் கூடுதலாக 40 அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!