மீண்டும் செயல்படத் தொடங்கிய ஈரோடு ஸ்டோன் பிரிட்ஜ் மீன் மார்க்கெட்

மீண்டும் செயல்படத் தொடங்கிய ஈரோடு ஸ்டோன் பிரிட்ஜ் மீன் மார்க்கெட்
X

ஈரோடு ஸ்டோன் பிரிட்ஜ் மீன் மார்க்கெட் வியாபாரத்திற்காக இன்று திறக்கப்பட்டது. 

ஈரோடு ஸ்டோன் பிரிட்ஜ் மீன் மார்க்கெட், 48 நாட்களுக்கு பிறகு, இன்று மீண்டும் செயல்படத் தொடங்கியது.

ஈரோடு ஸ்டோனி பிரிட்ஜ் மீன் மார்க்கெட்டில் 15-க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகிறது. இங்கு பெரும்பாலும் தூத்துக்குடி, கன்னியாகுமரி, கேரள மாநிலம் எர்ணாகுளம் போன்ற பகுதியில் இருந்து அதிக அளவில் கடல் மீன்கள் வந்து விற்பனை செய்யப்படுவது வழக்கம்.

கொரோனா பரவலை தொடர்ந்து, மீன் மார்க்கெட்டில், ஈரோடு மாநகராட்சி சார்பில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி சமூக இடைவெளி கடைப்பிடித்து கடைகள் அமைக்கப்பட்டன. எனினும், மீண்டும் கொரோனா 2-ம் அலை, மாவட்டத்தில் வேகமெடுக்க தொடங்கியதால், கடந்த மே மாதம் முதல் ஸ்டோனி பிரிட்ஜ் மீன் மார்க்கெட் செயல்பட அனுமதி மறுக்கப்பட்டது.

இந்நிலையில், தற்போது கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வருவதால், ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து, கிட்டத்தட்ட 48 நாட்களுக்கு பிறகு, ஈரோடு ஸ்டோன் பிரிட்ஜ் மீன் மார்க்கெட் வியாபாரத்திற்காக இன்று திறக்கப்பட்டது.

மீன் வாங்க வரும் பொதுமக்கள் சமூக இடைவெளி கடைபிடிக்கும் வகையில் வட்டம் போடப்பட்டிருந்தது. முகக்கவசம் அணிந்து வந்தவர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். இன்று, முதல்நாள் என்பதாலும், மார்க்கெட் திறந்தது தெரியாததாலும், மார்க்கெட்டில் மக்களின் வருகை குறைவாக இருந்தது. நாளை முதல், வழக்கம்போல் வியாபாரம் சூடு பிடிக்கும் என வியாபாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி