ஈரோடு: அனைத்துத்துறை திட்டங்களுக்கான அலுவலர்களுடன் அமைச்சர் முத்துசாமி ஆய்வு

ஈரோட்டில், அனைத்துத்துறை திட்டங்களுக்கான அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் முத்துசாமி பங்கேற்று ஆலோசனை மேற்கொண்டார் .

ஈரோடு கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் அனைத்துத்துறை திட்டங்களுக்கான அனைத்துத்துறை அலுவர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் கதிரவன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தமிழக வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி கலந்து ஆலோசனை மேற்கொண்டார்.

அப்போது பேசிய அமைச்சர் முத்துசாமி, கொரானா தொற்று பரவல் தமிழகம் முழுவதும் மெதுவாக குறைந்து வரும் நிலையில் ஈரோடு மாவட்டத்தில் இன்னும் கட்டுக்குள் வராததால் தடுப்பு நடவடிக்கைகள் போர்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டும். தமிழக முதலமைச்சர் தேர்தலுக்கு முன்பு பெற்ற கோரிக்கை மனுக்கள் மீது 100 நாட்களில் தீர்வு காணப்படும் என அறிவித்துள்ளார்.

எனவே ஈரோடு மாவட்டத்தில் அனைத்து துறைகளின் சார்பில் வரப்பெற்றுள்ள மனுக்களுக்கு முன்மொழிவு தயார் செய்து அரசுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட திட்டங்களில் 35 திட்டங்கள் ஈரோடு மாவட்டத்தில் செயல்படுத்த வேண்டிய திட்டங்களாக உள்ளது.

சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் அதற்கான உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அனைத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து அரசின் திட்டங்களை மக்களுக்கு கொண்டு சேர்க்கும் வகையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!