அத்தியாவசியப்பொருள் தேவையா? ஈரோட்டில் கட்டுப்பாட்டு மையம் துவக்கம்!
ஈரோட்டில், அத்தியாவசியப்பொருட்களான மளிகை, காய்கறி நடமாடும் வாகனங்கள் குறித்த கோரிக்கைக்கு கட்டுப்பாட்டு மையம் துவங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, ஈரோடு கலெக்டர் கதிரவன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: தமிழக முதல்வரின் உத்தரவுப்படி, கொரோனா தொற்று நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக, ஈரோடு மாவட்டத்தில் ஊரடங்கு காலத்தில் பொதுமக்களுக்கு தேவையான காய்கறிகள், பழங்கள் மற்றும் மளிகைப்பொருட்கள் நடமடாடும் வாகனங்கள் மூலம் விநியோகம் செய்யப்படுகின்றன.
இதுதொடர்பாக பொதுமக்களின் கோரிக்கைகளை அறிந்து தீர்வு செய்யும் பொருட்டு, ஈரோடு மாவட்ட அளவிலான கட்டுப்பாட்டு மையம் தொடங்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் 0424-2339102 என்ற எண்ணில் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை தொடர்பு கொண்டு தங்கள் கோரிக்கைகளை தெரிவிக்கலாம்.
அதன் அடிப்படையில் உரிய நடவடிக்கைகள் மேற்கொண்டு தீர்வு காணப்படும் என்று, அவர் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu