2 வருடத்தில் 6000 பேருக்கு வேலை : கே.வி.ராமலிங்கம் பேச்சு
ஈரோடு மேற்கு தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் கே.வி.ராமலிங்கம்,மோளகவுண்டன்பாளையம், இரணியன் வீதி, சுந்தராபுரம், சோலார், காந்திபுரம், கல்யாணசுந்தரம் வீதி உட்பட பல்வேறு பகுதிகளில் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் வீடு, வீடாக சென்று ஓட்டு சேகரித்தார். அங்கு வேட்பாளர் கே.வி.ராமலிங்கம், இரட்டை இலை சின்னத்துக்கு ஓட்டு கேட்டு பேசியதாவது:
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த, 5,430 இளைஞர்களுக்கு 2.42 கோடி ரூபாய் உதவித்தொகையும், 535 மாற்றுத்திறனாளி இளைஞர்களுக்கு 1.06 கோடி ரூபாய் உதவித்தொகையும் வழங்கப்பட்டுள்ளது.
மூன்று மாதங்களுக்கு ஒரு முறை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் கடந்த, 2018 முதல் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில், 98 முகாம் நடத்தப்பட்டு, தனியார் துறையில், 6,169 பேருக்கு பணி நியமனம் பெற்றுத்தந்துள்ளோம்.
தவிர தாட்கோ மூலம் சுய தொழில் துவங்க, 289 உறுப்பினர்களுக்கு, 2.45 கோடி ரூபாய் மானியத்துடன் கூடிய, 8.19 கோடி ரூபாய் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.
ஊரக மின்மயமாக்கல் திட்டத்தின் கீழ், 15.26 கோடி ரூபாய் மதிப்பில் கிராமப்புறங்களில் மேம்பாட்டு பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. 3,053 கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்களுக்கு, 27.32 கோடி ரூபாய் அளவுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த, பத்தாண்டுகளில், ஈரோடு மேற்கு தொகுதியில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. எனவே, வரும் சட்டசபை தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து, என்னை வெற்றி பெற செய்தால், தொடர்ந்து சிறந்த திட்டங்களை செயல்படுத்துவேன். இவ்வாறு பேசினார்.
இவரை ஆதரித்து, காளிங்கராயன்பாளையத்தில் பஞ்சாயத்து தலைர் எஸ்.மகேஸ்வரன் தலைமையில், வேட்பாளர் கே.வி.ராமலிங்கம் மகள் மீனா பிரீத்தி சிவகுமார், வீடு, வீடாக சென்று இரட்டை இலை சின்னத்துக்கு ஓட்டு சேகரித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu