530 சவரன் தங்க நகைகள் பறிமுதல்

530 சவரன் தங்க நகைகள் பறிமுதல்
X
உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட 530 சவரன் தங்க நகைகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

ஈரோடு மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மூலப்பாளையத்தில் பறக்கும்படை அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர். அப்போது அவ்வழியே வந்த கார் ஒன்றை சோதனையிட்ட போது உரிய ஆவணங்கள் இன்றி 530 சவரன் நகைகளை கொண்டு வந்தது தெரிய வந்தது.

பின்னர் அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர்கள் (முத்தூட் பின் கார்ப்) என்ற வங்கியின் பகுதி மேலாளர் முருகேசன், பாதுகாவலர் கார்த்திகேயகுமார் மற்றும் வாடிக்கையாளர் சேவை மைய அலுவலர் கதிரேசன் என்பது தெரியவந்தது. இதயைடுத்து பறிமுதல் செய்யப்பட்ட 530 சவரன் நகைகளை மேற்கு சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சைபுதீனிடம் பறக்கும் படை அதிகாரிகள் ஒப்படைத்தனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்