இன்ஸ்டாநியூஸ் செய்தி எதிரொலி : தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் உதவிய அமைச்சர்
ஈரோடு, சூரம்பட்டி, பாரதிபுரத்தில் ஏழு பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், அப்பகுதியில் உள்ள, 100க்கும் மேற்பட்ட வீடுகளை தனிமைப்படுத்தப்பட்டுள்ளர். அங்குள்ளவர்கள் வெளியே செல்ல முடியாலும், வெளி நபர்கள் உள்ளே செல்ல முடியாமல் இரு வழிகளில் கட்டை கட்டி மாநராட்சி அதிகாரிகள் அடைத்துள்ளனர்.
தனிமைப்பகுதியானதால், அங்கு பால், கீரை உள்ளிட்ட காய்கறிகள், பழங்கள், மளிகை பொருட்கள் விற்க யாரும் வருவதில்லை. இங்குள்ளவர்கள் மருந்து வாங்கக்கூட வெளியே செல்ல முடியவில்லை. இதற்கு மாற்று ஏற்பாடு செய்ய, மாநகராட்சி ஊழியர்களிடம் கோரியும், தீர்வு கிட்டவில்லை. இதனால் கடந்த 3 நாட்களுக்கு முன்பு அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இச்சம்பவம் குறித்து இன்ஸ்டாநியுஸ் தளத்தில் வெளியிட்ட செய்தியை கண்ட தமிழக வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி அப்பகுதி மக்களுக்கு உதவிகள் செய்ய ஏற்பாடு செய்தார். இதையடுத்து இன்று அப்பகுதிக்கு நேரடியாக சென்ற அமைச்சர் முத்துசாமி அங்குள்ள 110 வீடுகளுக்கும் தலா, ஐந்து கிலோ அரிசி, காய்கறி தொகுப்பு, மளிகை பொருட்கள் ஆகியவற்றை இலவசமாக வழங்கினார். இனிமேல் கொரோனா பாதிக்கப்பட்டு தனிமை பகுதியாக பிரித்து, கட்டைகள் கட்டும்போதே, அங்குள்ளவர்களுக்கு தேவையான பால், காய்கறி, மளிகை பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்ய, மாநகராட்சி அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu