திமுக வேட்பாளர் முத்துசாமி வேட்புமனு தாக்கல்

திமுக வேட்பாளர் முத்துசாமி வேட்புமனு தாக்கல்
X
சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் மேற்கு தொகுதி வேட்பாளர் முத்துசாமி தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

தமிழகத்தில் 2021 சட்டமன்ற தேர்தலானது வருகின்ற ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்தலில் திமுக சார்பில் ஈரோடு மேற்கு தொகுதியில் முன்னாள் அமைச்சரும் தெற்கு மாவட்ட செயலாளருமான சு.முத்துசாமி போட்டியிடுகிறார். இதற்காக கடந்த சில நாட்களாக அவர் மேற்கு தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருந்தார். ஒவ்வொரு வீடு வீடாகச் சென்று திமுக சாதனைகளை எடுத்துக்கூறி உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்து வருகிறார். இந்நிலையில் நேற்று ஈரோடு ஆர்டிஓ அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் சைபுதீனிடம் மேற்கு தொகுதியில் போட்டியிடுவதற்காக வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!