தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்த நாள் விழா : ஈரோட்டில் தேமுதிகவினர் கொண்டாட்டம்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்த நாள் விழா : ஈரோட்டில் தேமுதிகவினர் கொண்டாட்டம்.
X
தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்த நாள் விழாவையொட்டி ஈரோடு மாவட்டம் முழுவதும் தேமுதிகவினரால் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்தநாளையெட்டி ஈரோடு மாநகர் மாவட்ட கழகம் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. அதன்படி ஈரோடு பஸ் நிலையம் அருகில் உள்ள மாவட்ட தலைமை அலுவலகத்தில் கட்சி கொடியேற்றும் நிகழ்ச்சி நடந்தது.

இந்த நிகழ்ச்சிக்கு மாநகர் மாவட்ட செயலாளர் ஆனந்த் தலைமை தாங்கி, கட்சி கொடி ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். பின்னர் கோட்டை பத்ரகாளி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு நடந்தது. இதைதொடர்ந்து செங்கோடம்பள்ளம் குழந்தைகள் காப்பகத்தில் உள்ள மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு மாநகர் கழகம் சார்பில் காலை உணவு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

அதன் பிறகு ரத்ததான முகாம் நடந்தது. பின்னர் சூளை முதியோர் காப்பகத்தில் உள்ள முதியவர்களுக்கு மதிய உணவும், அன்னை சத்யா நகர் அரசு குழந்தைகள் காப்பகத்தில் உள்ள குழந்தைகளுக்கு பிஸ்கெட், பழங்கள் வழங்கப்பட்டன.

அதை தொடர்ந்து தொழிற்சங்க செயலாளர் மூர்த்தி ஏற்பாட்டில் வெண்டிபாளையம் குழந்தைகள் காப்பகத்தில் உள்ள குழந்தைகளுக்கு காலை உணவு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. பின்னர் சம்பத் நகர் பகுதியில் 5 இடங்களில் கட்சி கொடி ஏற்றப்பட்டு, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சிகளில் மாவட்ட பொருளாளர் பாலாஜி, துணைச்செயலாளர்கள் ரெங்கராஜ், ராம் செந்தில்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் குமார், சஞ்சய்குமார், பொதுகுழு உறுப்பினர்கள் சுப்ரமணி, கேப்டன் மன்ற செயலாளர் கிருஷ்ணராஜ், துணைச்செயலாளர் ஆனந்தன், இளைஞர் அணி செயலாளர் முருகேஷ், மகளிர் அணி செயலாளர் ரம்யா, மாணவர் அணி செயலாளர் சிலம்பரசன், வர்த்தக அணி செயலாளர் சுரேஷ்குமார், சம்பத்நகர் பகுதி செயலாளர் சரவணன், கருணாமூர்த்தி, மாவட்ட தொழிற்சங்க துணை செயலாளர்கள் சுரேஷ்குமார் , சரவணமூர்த்தி, தொழிற்சங்க நிர்வாகிகள் மோகன், பால்பாண்டி உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!