ஈரோட்டில் தொடர்ந்து குறைந்து வரும் டீசல் விலை

ஈரோட்டில் தொடர்ந்து குறைந்து வரும் டீசல் விலை
X

பைல் படம்.

ஈரோட்டில் டீசல் விலை இன்று 18 காசு குறைந்து ஒரு லிட்டர் டீசல் ரூ.94.51-க்கு விற்பனை செய்யப்பட்டது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டத்தையடுத்து சில மாதங்கள் வரை பெட்ரோல் ,டீசல் விலை எவ்வித மாற்றமுமின்றி விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் 5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவடைந்ததை அடுத்து மீண்டும் பெட்ரோல், டீசல் விலை உயரத் தொடங்கியது.

தமிழகத்திலும் பல்வேறு மாவட்டங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 102-ஐ தாண்டியது. ஈரோடு மாவட்டத்திலும் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102 -ஐ தாண்டியது. தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருவதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வந்தனர்.

ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. இந்நிலையில் தமிழக அரசு பெட்ரோல் விலையை லிட்டருக்கு 3 ரூபாய் குறைத்துள்ளது. இதனால் ஈரோட்டில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 100 கீழ் குறைந்தது. ஈரோட்டில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.99.94-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதேபோல் ஈரோட்டில் டீசல் விலையும் கடந்த இரண்டு நாட்களாக குறைந்து வருகிறது. அதன்படி ஈரோட்டில் நேற்று ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.94. 69 ஆக இருந்த நிலையில் இன்று 18 பைசா குறைந்து ரூ.94.51-க்கு விற்கப்பட்டது.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது