ஈரோடு : இறைச்சி, மீன்கடைகளில் அலைமோதிய கூட்டம்

ஈரோடு : இறைச்சி, மீன்கடைகளில் அலைமோதிய கூட்டம்
X

ஈரோடு மாநகர் பகுதியில் காலை முதலே இறைச்சி, மீன்கடைகளில் அலைமோதிய கூட்டம்

ஈரோடு மாநகர் பகுதியில் காலை முதலே இறைச்சி, மீன்கடைகளில் அலைமோதிய கூட்டம்

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தாக்கம் அதிகரித்துக் காணப்பட்டது.பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் ஈரோடு மாவட்டம் 2-ம் இடத்தில் உள்ளது. இதனால் கடந்த 14ஆம் தேதி முதல் நாளை வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

அதாவது மீன் மார்க்கெட்டுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. மாறாக தனித் தனியாக இயங்கும் இறைச்சி கடைகள் ,மீன் கடைகள் இயங்க மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதில் மீன் கடைகள், இறைச்சி கடைகளுக்கு சில கட்டுப்பாடுகளுடன் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை இயங்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

பொதுவாக ஞாயிற்றுக்கிழமைகளில் இறைச்சிக் கடைகளில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருக்கும். அதேபோல் இன்றும் மீன் கடை, இறைச்சிக் கடைகளில் அதிகாலை முதலே மக்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. ஈரோடு மாநகர் பகுதியில் உள்ள சூரம்பட்டி கருங்கல்பாளையம், வீரப்பன்சத்திரம், சம்பத் நகர், சூளை, ரங்கம்பாளையம் கொல்லம்பாளையம் போன்ற பகுதியில் உள்ள மீன் கடைகள், மட்டன் கடைகள், இறைச்சிக் கடைகளில் அதிகாலை முதலே மக்கள் நீண்ட வரிசையில் சமூக இடைவெளியை கடைபிடித்து வட்டத்தில் நின்று இறைச்சிகளை வாங்கி சென்றனர்.

மீன் கடைகளில் ரோகு, கட்லா, ரூபா, ஜிலேபி ஆகிய மீன்கள் கிலோ ரூ. 30 முதல் ரூ.50 வரை விலை உயர்ந்து விற்கப்பட்டது. இன்று மீன்கள் அதிகளவில் விற்பனை ஆனதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!