கொரோனா விதிமீறல்: 3 கடைகளுக்கு சீல்
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தாக்கம் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. கடந்த 5 நாட்களாக மாவட்டத்தில் கொரோனா தினசரி பாதிப்பு 100 ஐ கடந்து வருகிறது. இதையடுத்து மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி, சுகாதார துறையினர் ஒருங்கிணைந்து தடுப்பு நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
மாவட்ட கலெக்டர் கதிரவன், மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன், அவ்வப்போது வணிக நிறுவனங்கள், கடைகள் ஹோட்டல்கள், டீ கடைகளில் சென்று ஆய்வு செய்து. கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்களை பூட்டி சீல் வைத்தும், அபராதம் விதித்தும் வருகின்றனர்.
அதன்படி இன்று மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் தலைமையில் அதிகாரிகள் பெரியவலசு நால்ரோடு, சூளை பஸ் நிலையம் பகுதியில் உள்ள கடைகள், இறைச்சி கடைகள், டீ கடைகள் போன்றவற்றில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது பெரிய வலசு நால்ரோடு பகுதியில் உள்ள 2 பேக்கரி கடை, சூளை பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு பேக்கரி கடையில் சோதனை செய்த போது, கொரோனா பாதுகாப்பு தடுப்பு முறைகள் முறையாக பின்பற்றவில்லை என தெரியவந்தது. இதையடுத்து அந்த கடைகளுக்கு தலா 5000 வீதம் 15,000 அபராதம் விதித்து. அந்த 3 கடைகளையும் பூட்டி சீல் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து அந்த 3 பேக்கரி கடையும் பூட்டி சீல் வைக்கப்பட்டது. அதேபோல் சமூக இடைவெளி கடை பிடிக்காதவர்கள், முக கவசம் அணியாமல் வந்தவர்கள் என 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. மொத்தம் இன்று காலை மட்டும் ரூ .20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu