ஈரோடு மாநகர் பகுதியில் தினமும் 1300 பேருக்கு கொரோனா தடுப்பூசி

ஈரோடு மாநகர் பகுதியில் தினமும் 1300 பேருக்கு கொரோனா தடுப்பூசி
X
கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதால் தடுப்பூசி போட்டுக்கொள்ள பொதுமக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் முதலில் தனியார், அரசு ஆஸ்பத்திரியில் பணிபுரியும் டாக்டர்கள், செவிலியர்கள், ஊழியர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. பின்னர் போலீசார் பிற துறையில் பணியாற்றும் ஊழியர்கள் என 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த மார்ச் மாதம் 1-ஆம் தேதி முதல் 80 வயது மேற்பட்ட முதியவர்கள், மற்றும் 45 வயது முதல் 59 வயதுக்குட்பட்ட இணைய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாவட்டம் முழுவதும் 24 அரசு மையங்களிலும், 42 தனியார் ஆஸ்பத்திரியிலும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதையடுத்து ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்ட பொதுமக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதுவரை 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொது மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

தற்போது மாவட்டத்தில் கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதால் தடுப்பூசி போட்டுக்கொள்ள பொதுமக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அதிலும் குறிப்பாக ஈரோடு மாநகராட்சி பகுதியில் தனியார் ஆஸ்பத்திரிகள், அரசு ஆஸ்பத்திரி, ஆரம்ப சுகாதார மையங்களில் தினமும் 1000 முதல் 1300 பேர் வரை கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. இந்த தடுப்பூசியானது அரசு ஆஸ்பத்திரி, ஆரம்ப சுகாதார நிலையங்களில் பொதுமக்களுக்கு இலவசமாகவும் தனியார் ஆஸ்பத்திரியில் கட்டணம் வசூலிக்கப்பட்டு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் தடுப்பூசிகள் போதிய அளவு கையிருப்பில் உள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர். ஒருவர் முதல் தடவை கோவேக்சின் தடுப்பூசி செலுத்திக் கொண்டால் அடுத்த இருபத்தி எட்டாவது நாளில் இரண்டாவது டோசாக அதே கோவேக்சின் தடுப்பு ஊசியை எடுத்துக் கொள்ள வேண்டும் என சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!