ஈரோடு ரயில் நிலையங்களில் கொரோனா ஸ்கீரினிங் சென்டர் : கலெக்டர் தகவல்

ஈரோடு ரயில் நிலையங்களில் கொரோனா ஸ்கீரினிங் சென்டர் : கலெக்டர் தகவல்
X

ஈரோட்டில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட பணிகள் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் கிருஷ்ணனுண்ணி விழிப்புணர்வு பிரசார வாகனத்தை துவக்கி வைத்தார்.

ஈரோடு ரயில் நிலையங்களில் கொரோனா ஸ்கீரினிங் சென்டர் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்

ஈரோடு மாவட்ட அளவிலான உலக தாய்ப்பால் வாரவிழா ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட பணிகள் விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சித் தலைவர் கிருஷ்ணனுண்ணி கலந்து கொண்டு விழிப்புணர்வு பிரசார வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இதனை தொடர்ந்து 5 கர்ப்பிணி பெண்களுக்கு சத்து பொருட்கள் அடங்கிய பெட்டகத்தை வழங்கினார். இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தின் மூலம் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதன் அவசியம், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் சாப்பிட வேண்டிய ஊட்டச்சத்து உணவு வகைகளான, காய்கறிகள், கீரைகள், பழங்கள் குறித்து எடுத்துரைக்கப்படுகிறது.

மேலும் குழந்தை பெற்றவுடன் ஒரு மணி நேரத்திற்குள் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். பிறகு தொடர்ந்து 2 ஆண்டுகள் தவறாமல் தாய்ப்பால் மட்டுமே வழங்க வேண்டும். குழந்தை வளர்ச்சிக்கு தேவையான அனைத்து சத்துகளும் தாய்பாலில் உள்ளது. இதனை பெண்கள் உணர்ந்து கொண்டு கர்ப்பம் மற்றும் குழந்தை பெற்ற காலங்களில் செயல்பட வேண்டும் என அறிவுரைகள் வழங்கப்படுகிறது.

இதனிடையே செய்தியாளர்களை சந்தித்த ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி, ஈரோடு மாவட்டத்தில தற்போது அதிகரித்து வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் விதித்தில் முதற்கட்டமாக மாவட்டம் முழுவதும் அனைத்து கடைளுக்கும் நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது என்றும் வரும் காலங்களில் தொற்று பரவிலின் அடிப்படையில் கட்டுபாடுகள் மாற்றி அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

மேலும் மாவட்டத்தில் அதிக பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக கண்டறியப்பட்டுள்ள இடங்களில் கூடுதலாக கட்டுபாடுகள் விதிக்கப்பட்டு கண்காணிக்கப்படுவதாகவும், வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்கள் கட்டாயமாக தடுப்பூசி சான்றிதழ் காண்பிக்க வேண்டும் என்றும் தெரிவித்த அவர் ரயில் நிலையங்களில் கொரோனா ஸ்கீரினிங் சென்டர் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருதாகவும் தெரிவித்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!