கொரானா பரவல்: உழவர் சந்தை மாற்றி அமைப்பு

கொரானா பரவல்: உழவர் சந்தை மாற்றி அமைப்பு
X
ஈரோடு சம்பத் நகரில் இயங்கி வரும் உழவர் சந்தை மூன்றாக பிரிக்கப்பட்டு வரும் திங்கள்கிழமை முதல் மூன்று இடங்களில் செயல்படும்.

தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக பொதுமக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்கும் பொருட்டு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகறது. அதன் ஒரு பகுதியாக ஈரோடு சம்பத் நகர் பகுதியில் இயங்கி வரும் உழவர் சந்தையானது மூன்றாக பிரிக்கப்பட்டு வரும் 12.04.2021 திங்கள் கிழமை முதல் செயல்படவுள்ளது.

இதுகுறித்து கலெக்டர் கதிரவன் தெரிவித்துள்ளதாவது, உழவர் சந்தையின் ஒருபகுதி குமலன்குட்டையில் உள்ள மாநகராட்சி ஆரம்ப பள்ளியிலும் மறுபகுதி பெரியார்நகர் உழவர் சந்தையுடனும், மூன்றாவது பகுதி சம்பத்நகர் உழவர்சந்தையிலும் என மூன்று இடங்களில் இயங்கும்.எனவே அந்தந்த பகுதியை சார்ந்த பொதுமக்கள் அவர்கள் பகுதியில் இயங்கும் உழவர் சந்தையை பயன்படுத்தி சம்பத் நகரில் கூட்ட நெரிசலை தவிர்க்க ஒத்துழைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும், உழவர்சந்தை வளாகத்திற்குள் சமூக இடைவெளியை கடைபிடித்தும், முகக்கவசம் அணிந்தும்,கிருமிநாசினியை பயன்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Tags

Next Story