ஈரோட்டில் 15 ஆயிரத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு...
ஈரோடு மாவட்டத்தில் முதலில் கொரோனா தாக்கம் அதிகரித்து வந்தது. தினமும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு வந்தனர். மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதன் காரணமாக மாவட்டத்தில் நோய்த்தொற்று குறைய தொடங்கியுள்ளது. இதன் காரணமாக நோய் தொற்றிலிருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக மாவட்டத்தில் கொரோனாவால் பாதித்தவர்களின் தினசரி எண்ணிக்கை சற்று அதிகரிக்க தொடங்கி உள்ளது. சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 14 ஆயிரத்து 999ஆக உயர்ந்ததுள்ளது. நோய் தொற்றிலிருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 14 ஆயிரத்து 723 ஆக உள்ளது.கொரோனாவால் மாவட்டத்தில் இதுவரை 150 பேர் உயிரிழந்துள்ளனர்.
தேர்தல் நெருங்கி வருவதால் மக்கள் அலட்சியமாக இருக்க வேண்டாம் என்றும் கண்டிப்பாக முக கவசம் அணிந்து வெளியே வரவேண்டும் என்றும் சுகாதாரத் துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu