கொரானா அச்சம்: மாட்டு வியாபாரிகள் வரத்து குறைவு
ஈரோடு கருங்கல்பாளையம் மாட்டுச்சந்தை வாரந்தோறும் புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமைகளில் கூடி வருகிறது. அதன்படி நேற்று நடைபெற்ற சந்தைக்கு பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் 100-க்கும் மேற்பட்ட கன்றுக்குட்டிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
இதை பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த வியாபாரிகள் வாங்கி சென்றனர். இந்த நிலையில் இன்று வழக்கமான சந்தை கூடியது. இந்த சந்தைக்கு ஈரோடு, கரூர், நாமக்கல், திருவண்ணாமலை, கோவை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் தங்களது மாடுகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். 375 பசு மாடுகளும், 225 எருமை மாடுகளும் என மொத்தம் 650 மாடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டு இருந்தன.
இதில் எருமை மாடு ஒன்று ரூ.30 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை விற்பனையானது. பசுமாடு ஒன்று ரூ.30 ஆயிரம் முதல் ரூ.70 ஆயிரம் வரை விற்பனையானது. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா, கோவா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து குறைந்தளவு வந்திருந்த வியாபாரிகள் விவசாயிகளிடம் நேரடியாக விலைபேசி மாடுகளை வாங்கி வாகனங்களில் ஏற்றி சென்றனர்.
இதுகுறித்து சந்தை நிர்வாகிகள் கூறும்போது, 'கொரோனா பரவல் அதிகரிப்பால் கர்நாடக மற்றும் கேரளாவை சேர்ந்த வியாபாரிகள் சந்தைக்கு வரவில்லை. மேலும் மற்ற மாநிலங்களை சேர்ந்த வியாபாரிகளும் குறைந்த அளவே வந்திருந்ததால் மாடுகள் விற்பனை மந்தமானது. இன்று கொண்டுவரப்பட்ட மாடுகளில் 70 சதவீதத்துக்கும் குறைவான மாடுகளே விற்பனையானது' என்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu