கூட்டுறவு சங்கம் கூட்டுறவு மக்கள் இயக்கமாக மாற வேண்டும் : அமைச்சர் பெரியசாமி

கூட்டுறவு சங்கம் கூட்டுறவு மக்கள் இயக்கமாக மாற வேண்டும் : அமைச்சர் பெரியசாமி
X

ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி மகளிர் சுய உதவிக் குழுவுக்கு கடன் வழங்கினார். அருகில் அமைச்சர் முத்துசாமி.

கூட்டுறவு சங்கம் கூட்டுறவு மக்கள் இயக்கமாக மாற வேண்டும் என தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி ஈரோட்டில் தெரிவித்தார்.

தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி பெருந்துறை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

இதனை தொடர்ந்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நடைபெற்ற கூட்டுறவுத்துறையின் வளர்ச்சித்திட்டங்கள் குறித்த ஆலோசனைக்கூட்டத்தில் அமைச்சர்கள் பெரியசாமி மற்றம் முத்துசாமி ஆகியோர் கலந்து கொண்டு கூட்டுறவுத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஐ.பெரியசாமி , கிராம மக்கள் அனைவரும் அந்தப்பகுதியிலுள்ள கூட்டுறவு சங்கத்தில் புதிய உறுப்பினராக்கி, கடன் வழங்கப்பட்டு வருகிறது.

கிராமப்புற மாணவர்களுக்கும் கூட்டுறவு சங்கத்தில் கல்விக்கடன் வழங்கப்படுகிறது. பயிர்கடன் கடந்தாண்டு 9500 கோடி ரூபாய் வழங்கியதை இந்தாண்டு 11500 கோடி வழங்க உள்ளது.

கடந்த ஆட்சியில் அவசரமாக பயிர் கடன் 12100 கோடி தள்ளுபடி செய்யப்பட்டதை முறையாக பயிர்கடன் வழங்கப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறோம்.

சில இடங்களில் பயிர் செய்யாத இடங்களுக்கும் பயிர்கடன் வழங்கப்பட்டுள்ளதாக புகார்கள் வந்துள்ளது. அதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

பயிர்கடன் ஒருவருக்கு 3 லட்சம் தான் தள்ளுபடி செய்யப்படும். கூட்டுறவு சங்கம் கூட்டுறவு மக்கள் இயக்கமாக மாறினால் அனைத்து மக்களும் பயன்பெறுவார்கள்.

ரேஷன் கடைகளில் உள்ள காலி பணியிடங்களை கிராமப்புற, ஏளை எளிய இளைஞர்களுக்கு எவ்வித முறைகேடும் இன்றி , வெளிப்படை தன்மையோடு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்றார்.

Tags

Next Story
ai marketing future