நெருங்கும் தேர்தல், தீவிரமாகு வாகன சோதனைகள், தேர்தல் ஆணையம் அதிரடி .

நெருங்கும் தேர்தல், தீவிரமாகு வாகன சோதனைகள், தேர்தல் ஆணையம் அதிரடி .
X
தமிழக சட்டபேரவை தேர்தல் நடக்க சில தினங்களே உள்ள நிலையில் தேர்தல் ஆணையம் அதிரடியாக வாகன சோதனையை தீவிரப்படுத்தியுள்ளது.

தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் சுமுகமான முறையில் நடைபெற பல்வேறு நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் எடுத்து வருகிறது.தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்து வருகிறது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் அமைதியான முறையில் நடைபெற துணை ராணுவத்தினர் வருகை புரிந்துள்ளனர். இவர்கள் பதற்றமான வாக்குச்சாவடிகளில் தேர்தல் நாளன்று பணிபுரிவார்கள்.

தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் பொதுமக்களுக்கு பணம் பரிசுப் பொருட்கள் கொண்டு செல்லப் படுகிறது என்பதை கண்காணிக்க தேர்தல் பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழு, வீடியோ குழுவினர் மாவட்டம் முழுவதும் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர்.

இவர்கள் ஆங்காங்கே வாகன சோதனை நடத்தி ரூ.50 ஆயிரத்துக்கு மேல் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லும் பணம் மற்றும் பரிசுப் பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.

இதேபோல் ஈரோடு மாவட்டத்தில் உள்ள சோதனை சாவடிகள் அனைத்திலும் போலீசார் தீவிரமாக கண்காணித்து வாகனங்களில் வரும் நபர்கள் உடைமைகளை சோதித்து அதன் பிறகே உள்ளே அனுமதிக்கின்றனர்.

ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி ஆற்றங்கரை சோதனை சாவடி, பவானி லட்சுமி நகர் சோதனைச் சாவடி, நொய்யல் ஆற்று சோதனைச்சாவடி, விஜயமங்கலம் சோதனை சாவடி, தாளவாடி தமிழக கர்நாடகா எல்லை சோதனைச் சாவடி என மாவட்டம் முழுவதும் உள்ள சோதனை சாவடியில் போலீசார் உஷார் படுத்தப்பட்டு தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சோதனை சாவடிகளில் துணை ராணுவத்தினரும் அந்த பகுதியாக வரும் வாகனங்களை நிறுத்தி சோதனை செய்து அனுப்பி வருகின்றனர். வானங்களில் பரிசுப்பொருட்கள், பணம், இருக்கிறதா ? என்று தீவிரமாக சோதனை செய்கின்றனர். சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 4 நாட்களே மீதம் இருப்பதால் சோதனை மேலும் தீவிரப் படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதேபோல் ஈரோடு மாவட்டம் முழுவதும் முக்கிய அரசியல் கட்சி பிரமுகர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இவர்களின் நடவடிக்கைகளை தேர்தல் பிரிவு அதிகாரிகள் ரகசியமாக கண்காணித்து வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!