அதிமுக நிர்வாகி திமுகவுக்கு தாவினார்

அதிமுக நிர்வாகி திமுகவுக்கு தாவினார்
X
ஈரோட்டில் அதிமுகவின் முக்கிய நிர்வாகி, திமுக மாவட்ட செயலாளர் முத்துசாமி முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

ஈரோடு மாவட்ட ஜெ., பேரவை செயலாளராக பொறுப்பு வகித்து வந்தவர் மணி என்ற சின்னசாமி. இவரது மனைவி மோகனப்ரியா. இவர், ஈரோடு மேற்கு தொகுதிக்குட்பட்ட பிச்சாண்டாம்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவராக உள்ளார். இவர்களது தலைமையில் பிச்சாண்டாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த சுமார் 500க்கும் மேற்பட்ட அதிமுகவினர், அக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர்.

இதற்கான நிகழ்ச்சி வெள்ளோட்டில் நடைபெற்றது. மேற்கு தொகுதி திமுக வேட்பாளரும், மாவட்ட செயலாளருமான முத்துசாமி முன்னிலையில் திமுகவில் இணைத்துக் கொண்ட அவர்கள், வருகிற தேர்தலில் திமுகவின் வெற்றிக்காக பாடுபடுவதாக உறுதி அளித்தனர். நிகழ்ச்சியில், திமுக மாநகர செயலாளர் சுப்பிரமணி, எல்லப்பாளையம் சிவக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!