/* */

அக்னி ஸ்டீல்ஸ் பணியாளர்கள் தங்கள் ஒரு நாள் சம்பளம் ரூ.5லட்சத்தை கொரோனா நிவாரண நிதியாக வழங்கினர்

அக்னி ஸ்டீல்ஸ் பணியாளர்களின் ஒரு நாள் சம்பளம் ரூ.5 லட்சத்தை கொரோனா நிவாரண நிதியாக அமைச்சர் முத்துசாமியிடம் வழங்கினர்.

HIGHLIGHTS

அக்னி ஸ்டீல்ஸ் பணியாளர்கள் தங்கள் ஒரு நாள் சம்பளம் ரூ.5லட்சத்தை கொரோனா நிவாரண நிதியாக வழங்கினர்
X

 வீட்டுவசதி துறை அமைச்சர் எஸ்.முத்துசாமியிடம் , அக்னி ஸ்டீல்ஸ் பொது மேலாளர்கள்( ஜி.எம்.) சீனிவாசன், ஜெயக்குமார், செயல் இயக்குநர்கள் ராம்ஜி, சக்தி கணேஷ் மற்றும் இளங்கோ ஆகியோர் கொரோனா நிவாரண நிதியை வழங்கினர். 

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில், கொரோனா நிவாரண நிதியாக அனைவரும் வழங்கலாம் என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கேட்டுக்கொண்டார். அதன்பேரில், பல்வேறு அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், தன்னார்வலர்கள் நிவாரணநிதி வழங்கி வருகின்றனர்.

அந்த வகையில் ஈரோடு அக்னி ஸ்டீல்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் பணியாற்றும் பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் தங்களது ஒரு நாள் சம்பள தொகையை நிவாரணமாக வழங்க முடிவு செய்து ரூ. 5 லட்சத்தை நிவாரணமாக அளித்துள்ளனர். இந்த நிவாரண நிதி ரூ.5 லட்சத்துக்கான காசோலையை , வீட்டுவசதி துறை அமைச்சர் எஸ்.முத்துசாமியிடம் , அக்னி ஸ்டீல்ஸ் பொது மேலாளர்கள்( ஜி.எம்.) சீனிவாசன், ஜெயக்குமார், செயல் இயக்குநர்கள் ராம்ஜி, சக்தி கணேஷ் மற்றும் இளங்கோ ஆகியோர் வழங்கினர். கடந்த மாதம் தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு, அக்னி ஸ்டீல்ஸ் நிறுவனம் ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 17 Jun 2021 11:19 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
  2. கீழ்பெண்ணாத்தூர்‎
    வேட்டவலம் அருகே கள்ளச்சாராய ஊறல் கொட்டி அழிப்பு: ஒருவர் கைது
  3. கலசப்பாக்கம்
    பருவதமலையில் புதிய இரண்டு இடி தாங்கிகள் பொருந்தும் பணி துவக்கம்
  4. வீடியோ
    தனிச்செயலாளர் மீது வழக்குப் பதிவு | Kejriwal-க்கு புதிய நெருக்கடி |...
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  6. திருவண்ணாமலை
    அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு...
  7. செய்யாறு
    மணல் கடத்தலை தடுக்க கண்காணிப்பு குழுக்கள்: கோட்டாட்சியர் அறிவிப்பு
  8. ஈரோடு
    பிரதமர் அலுவலக அதிகாரி போல் நடித்து ரூ.28 லட்சம் மோசடி: ஐடி நிறுவன...
  9. ஆரணி
    ஆரணியில் இயற்கை உணவு திருவிழா: ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வைகாசி மாதப் பெளா்ணமியில் கிரிவலம் வர உகந்த நேரம்...