ஈரோடு மாவட்டத்தில் 49 இடங்களில் 5161 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பு
தமிழக சுகாதாரத்துறையின் வழிகாட்டு நெறிமுறைகள்படி ஈரோடு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் பரவல் இருக்க பல்வேறு தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க போர்க்கால அடிப்படையில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஈரோடு மாநகராட்சியில் மாரப்பா 2-வது வீதி, பூசாரி சென்னிமலை 2(ம) 5வது வீதி, பிருந்தாவன் அப்பார்ட்மெண்ட், ரயில்வே காலனி, பெரியண்ணன் வீதி, சாமிப்பா 3-வது வீதி, முத்து வேலப்ப மெயின் வீதி, மாணிக்கம்பாளையம் வீட்டுவசதி வாரியம், கந்தாம்பாளையம், எஸ்.கே.சி.ரோடு, அருள்வேலவன் நகர் பி.பெ.அக்ரஹாரம், ராஜகோபால் தோட்டம், செங்காடு, கருங்கல்பாளையம், பொன்னுசாமி வீதி, கே.என்.கே.ரோடு, நாராயணவலசு, முத்தும்பாளையம் வீட்டுவசதி வாரியம், வீரப்பன்சத்திரம்,
கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் ராமர் எக்ஸ்டன்சன், செங்கோட்டையன் நகர், சென்னிமலையில் ராக்மௌண்ட் சிட்டி பெரியவலசு, வெள்ளிரான்காடு ஈங்கூர் மேற்கு, ஈங்கூர், பெருந்துறை வட்டத்தில் வெட்டையன்கிணறு, கந்தாம்பாளையம், வாய்க்கால்மேடு, பெரியவேட்டுவம்பாளையம், சத்தியமங்கலம் நகராட்சியில் கோணமூலை, மேட்டூர், வரதம்பாளையம், பவானி நகராட்சியில் கவுந்தபாடி, சாத்தநாய்க்கனூர் ஒரிச்சேரி, குருப்பநாயக்கன்பாளையம், மாந்தொழிலாளர் முதல் வீதி, பவானி மெயின்ரோடு ஆப்பக்கூடல்,
டி.என்.பாளையம் நகராட்சியில் ராஜீவ்காலனி அரக்கன்கோட்டை, பட்டத்தலச்சி கோவில் வீதி வீரச்சின்னனூர், கொடுமுடி வட்டத்தில் சிவகிரி, அம்மன் கணபதிபாளையம், அம்மாபேட்டையில் சின்னகோணமூக்கனூர், குருவரெட்டியூர் மெயின்ரோடு, மொடக்குறிச்சி வட்டத்தில் நஞ்சை ஊத்துக்குளி, நகராட்சி நகர், கஸ்பாபேட்டை ஆகிய பகுதிகளிகளைச் சேர்ந்த 248 நபர்கள் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் 49 இடங்கள் கட்டுப்பாட்டு பகுதிகள் என அறிவிக்கப்பட்டு அப்பகுதிகளில் உள்ள 1234 வீடுகளில் 5,161 நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
எனவே, சளி, காய்ச்சல் உள்ளிட்ட நோய்க்கான அறிகுறி உள்ளவர்கள் உடனடியாக அருகில் அரசு மருத்துவமனைகளை அணுகி மருத்துவரின் ஆலோசனைகளை பெற வேண்டும். மேலும், அனைத்து தரப்பு மக்களும் பொது இடங்களில் கட்டாயம் முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். கிருமிநாசினி கொண்டு 2 மணிநேரத்திற்கு ஒருமுறை தங்களது கைகளை சுத்தம் செய்து கொள்ள வேண்டும். மேலும், அரசின் நோய்தடுப்பு முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். என சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu