ரூ.24 கோடியில் 482 குடிநீர் பணி நிறைவு : அ.தி.மு.க., வேட்பாளர் ராமலிங்கம் பேச்சு

ரூ.24 கோடியில் 482 குடிநீர் பணி நிறைவு :  அ.தி.மு.க., வேட்பாளர் ராமலிங்கம் பேச்சு
X
கடந்த ஐந்தாண்டுகளில், 24.40 கோடி ரூபாயில், 482 குடிநீர் திட்டப்பணிகள் நிறைவு செய்யப்பட்டு, மக்களுக்கு பயன் தருகிறது என அ.தி.மு.க. வேட்பாளர் ராமலிங்கம் வாக்காளர்களிடையே தெரிவிததார்.

ஈரோடு மேற்கு தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் கே.வி.ராமலிங்கம், பெரியசேமூர், ஆண்டிக்காடு, பாண்டியன் நகர், ராம் நகர், பூலாங்காடு, சக்தி நகர், மாணிக்கம் நகர், மாணிக்கம்பாளையம் ஹவுசிங் யூனிட் பகுதியில் இரட்டை இலை சின்னத்துக்கு ஓட்டு சேகரித்தார். பொதுமக்களிடம், வேட்பாளர் கே.வி.ராமலிங்கம் பேசியதாவது:

ஈரோடு அரசு மருத்துவமனையில், 100 படுக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் வாழ்விடங்களிலேயே சிகிச்சை பெறும் வகையில், அம்மா மினி கிளினிக், நான்கு துவங்கப்பட்டுள்ளது.

கடந்த ஐந்தாண்டுகளில், 24.40 கோடி ரூபாயில், 482 குடிநீர் திட்டப்பணிகள் நிறைவு செய்யப்பட்டு, மக்களுக்கு பயன் தருகிறது. 2.62 கோடி ரூபாயில், 60 வறட்சி நிவாரண பணிகள், 20.89 கோடி ரூபாயில், 65.16 கி.மீ., துாரத்துக்கு மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 227.41 கோடி ரூபாய் மதிப்பில், தனி குடிநீர் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், 419.76 கோடி ரூபாயில், 15 பணிகள் எடுத்து கொள்ளப்பட்டு, மூன்று பணிகள், 125 கோடி ரூபாயில் முடிக்கப்பட்டுள்ளன. ஐந்து பணிகள், 270 கோடி ரூபாயில் நடந்து வருகிறது. திருக்கோவில்கள் அன்னதான திட்டத்தின் கீழ், இரண்டு கோவில்களில் பக்தர்களுக்கு தினமும் அன்னதானம் வழங்கப்படுகிறது.

கிராமப்புற பகுதியில் உள்ள கோவில்கள் புனரமைப்பு நிதியாக, தலா, ஒரு லட்சம் ரூபாய், 19 கோவில்களுக்கு பெற்று தரப்பட்டு, திருப்பணி நடந்துள்ளது. 14 கோவில்களுக்கு குடமுழுக்கு நடந்துள்ளது. இவ்வாறு பேசினார்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil