பெண்ணிடம் நகை பறித்த வழக்கு- 5 பேர் கைது

பெண்ணிடம் நகை பறித்த வழக்கு- 5 பேர் கைது
X

சாலையில் தனியாக சென்ற பெண்ணிடம் நகையை பறித்து சென்ற வழக்கில் தொடர்புடைய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஈரோடு மாவட்டம் பவானியை அடுத்துள்ள தொட்டிபாளையத்தை சேர்ந்தவர் திருச்செல்வி. இவர் அக்ரஹாரம் பகுதியிலுள்ள தோல் பதனிடும் ஆலையில் அலுவலராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த ஜனவரி மாதம் 7ம் தேதி வேலை முடித்து விட்டு சாலையில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த நபர்கள் ரூ. 80ஆயிரம் மதிப்புள்ள தங்க சங்கிலியை பறிக்க முயற்சித்தனர். இதனையடுத்து சத்தம்போட்ட திருச்செல்வியின் வாய், காது உள்ளிட்ட இடங்களில் கத்தியால் குத்தி கிழித்து தங்க சங்கிலியை பறித்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதில் படுகாயமடைந்த திருச்செல்வி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த கருங்கல்பாளையம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் அக்ரஹாரம் பகுதியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 5 பேரை பிடித்து விசாரணை செய்ததில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளனர். அவர்கள் மீது சந்தேகமடைந்த காவல்துறையினர் கருங்கல்பாளையம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் வீரப்பன்சத்திரத்தை சேர்ந்த சாம்சன், திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த சிவன்பாண்டி , கார்த்திக்,முகமது நசீர் மற்றும் சக்திவேல் என்பதும் இவர்கள் அக்ரஹாரத்தில் நடந்த தங்கசங்கிலி பறிப்பு சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து அவர்களிடமிருந்து 8 பவுன் தங்க சங்கிலி,இரண்டு இருசக்கர வாகனம்,இரண்டு கத்தி உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்த காவல்துறையினர் அவர்கள் ஐவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்