போக்சோவில் கைது - 20 ஆண்டுகள் சிறை தண்டனை
ஈரோடு மாவட்டம் பெருந்துறை பணிக்கம்பாளையம் பகுதியில் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். அதே பகுதியில் தனியார் கம்பெனியில் வேலை செய்யும் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த ரபூல் மொண்டால் என்ற இளைஞரும் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ரபூல் மொண்டால் அப்பெண்ணின் 8 வயதான குழந்தையிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டதாக கூறி கடந்த ஆண்டு ஈரோடு அனைத்து மகளிர் காவல்நிலயத்தில் புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் ரபூல் மொண்டால் என்பவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். இவ்வழக்கினை விசாரித்த மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி மாலதி இன்று தீர்ப்பு வழங்கினார்.
அந்த தீர்ப்பில் ரபூல் மொண்டாவிற்கு 20 ஆண்டுகள் சிறை தண்டணையும் 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்துள்ளார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு சார்பில் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் பரிந்துரை செய்துள்ளார்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu