ஈரோட்டில் 13,216 பேருக்கு கொரோனா தடுப்பூசி

ஈரோட்டில் 13,216 பேருக்கு கொரோனா தடுப்பூசி
X

பைல் படம்.

ஈரோட்டில் இதுவரை 13,216 முதியோர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை 24 அரசு மையங்களிலும், 42 தனியார் மருத்துவமனைகளிலும் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கும், 45 வயது முதல் 59 வயதுவரை உள்ளவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தனியார் மருத்துவமனைகளில் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கும், 45 வயதுக்கு மேற்பட்டவர்களில் இருந்து 59 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட ரூ.250 கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

கடந்த மார்ச் 1 ம் தேதி முதல் நேற்று வரை ஈரோடு மாவட்டம் முழுவதும் 13,216 முதியோர், மற்றும் இதய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட்டு உள்ளனர்.இதில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 4423 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளதாக சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர். ஈரோடு மாவட்டம் முழுவதும் நாளொன்றுக்கு 66 மையங்களில் முதியவர்களுக்கு, இதய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

Tags

Next Story
ai and future cities