ஈரோடு மாவட்டத்தில் அ.தி.மு.க - தி.மு.க 4 தொகுதிகளில் நேரடி போட்டி..

ஈரோடு மாவட்டத்தில் அ.தி.மு.க - தி.மு.க  4 தொகுதிகளில் நேரடி போட்டி..
X
ஈரோடு மாவட்டத்தில் அ.தி.மு.க - தி.மு.க 4 தொகுதிகளில் நேரடியாக போட்டியிடுவதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் அ.தி.மு.க ஈரோடு மேற்கு, கோபி, பவானி, அந்தியூர், பவானி சாகர், பெருந்துறை ஆகிய 6 தொகுதிகளில் நேரடியாக களம் இறங்குகிறது. ஈரோடு கிழக்கு தொகுதி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கும், மொடக்குறிச்சி தொகுதி பாரதிய ஜனதா கட்சிக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதேபோல் தி.மு.க.வைப் பொறுத்தவரை ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பவானி ,அந்தியூர், கோபி ஆகிய 5 சட்டமன்ற தொகுதிகளில் நேரடியாக களம் இறங்குகிறது. காங்கிரஸ் கட்சிக்கு ஈரோடு கிழக்கு தொகுதியும், பவானிசாகர் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும், பெருந்துறை தொகுதி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதில் அ.தி.மு.க.வும் ,தி.மு.க.வும் ஈரோடு மேற்கு, பவானி, கோபி, அந்தியூர் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளில் நேரடியாக களம் இறங்குகிறது. ஈரோடு கிழக்கு தொகுதியை பொறுத்தவரை அ.தி.மு.க கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ், தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சியும் நேரடியாக களம் காண்கிறது.

பவானிசாகர் தனித் தொகுதியில் அதிமுகவும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் மோதுகின்றன. இதேபோல் பெருந்துறையில் அதிமுகவும், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியும், மொடக்குறிச்சி தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியும், தி.மு.க.வும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதனால் அரசியல் களம் சூடு பிடித்துள்ளது.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil