தேர்தல் செலவின பார்வையாளர்கள் ஈரோடு வருகை

தேர்தல் செலவின பார்வையாளர்கள் ஈரோடு வருகை
X

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி ஈரோடு மாவட்ட தேர்தல் செலவின பார்வையாளர்கள் ஈரோடு வந்தனர்.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி தமிழகம் முழுவதும் தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளுக்கும் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அந்தவகையில் பொது பார்வையாளர்களாக ஈரோடு கிழக்கு தொகுதிக்கு விஷால் ககன், ஈரோடு மேற்கு தொகுதிக்கு அடோனு சட்டர்ஜி, மொடக்குறிச்சி ,பெருந்துறை தொகுதிகளுக்கு மனோஜ்குமார், கோபி, பவானிசாகர் தொகுதிக்கு நர்பு வாங்டி புடியா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

செலவின பார்வையாளர்களாக ஈரோடு கிழக்கு மற்றும் மேற்கு தொகுதிகளுக்கு அரூப் சட்டர்ஜி, மொடக்குறிச்சி, பெருந்துறை தொகுதிகளுக்கு சஞ்சீவ்குமார்தேவ், அந்தியூர் கோபி தொகுதிகளுக்கு அர்ஜூன் லால்ஜட் மற்றும் பவானி, பவானிசாகர் ஆகிய தொகுதிகளுக்கு பவானி சங்கர் மீனா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். காவல் பார்வையாளராக 8 தொகுதிக்கும் சுனில்குமார் நாயக் நியமிக்கப்பட்டுள்ளார். இதில் இன்று வருகை தந்த செலவின பார்வையாளர்களான கிழக்கு மற்றும் மேற்கு தொகுதிகளுக்கு அரூப் சட்டர்ஜி, மொடக்குறிச்சி, பெருந்துறை தொகுதிகளுக்கு சஞ்சீவ் குமார் தேவ், அந்தியூர் கோபி தொகுதிகளுக்கு அர்ஜூன் லால் ஜட் ஆகியோரை ஈரோடு மாவட்ட கலெக்டர் மற்றும் தேர்தல் அலுவலருமான கதிரவன் , மாவட்ட எஸ்பி., தங்கதுரை மற்றும் அனைத்து தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஆகியோர் வரவேற்றனர். தொடர்ந்து தொகுதிகள் நிலவரம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இவர்களைத் தொடர்ந்து மற்ற தேர்தல் பார்வையாளர்களும் ஈரோடுக்கு வருகை தரவுள்ளனர்.

Tags

Next Story