சாக்கடையை தூர்வார கோரி பொதுமக்கள் சாலை மறியல்

சாக்கடையை தூர்வார கோரி பொதுமக்கள் சாலை மறியல்
X

சாக்கடையை தூர்வார கோரி ஈரோட்டில் பொதுமக்கள் சாலைமறியல் போராட்டம் நடத்தினர்.

ஈரோடு மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள காசியன்னண் கவுண்டர் வீதியில் சுமார் 200 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இப்பகுதியில் கடந்த பல மாதங்களாக சாக்கடை தூர்வாராமல் இருப்பதாகவும் இதனால் சாக்கடையில் தேங்கும் கழிவு நீரால் பல நோய் தொற்றுகளுக்கு ஆளாவதாகவும் அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இது குறித்து பலமுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் மாநகராட்சி அலுவலகத்தில் மனுக்கள் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் இன்று திடீரென சாலை மறியல் போராட்டதில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த துணை காவல் கண்காணிப்பாளர் ராஜு தலைமையிலான போலீசார், மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து மேற்கு சட்டமன்ற உறுப்பினர் ராமலிங்கம் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பிரச்சனை தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டதை அடுத்து அப்பகுதி பொது மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். பொது மக்களின் இந்த திடீர் சாலை மறியல் போராட்டத்தால் பேருந்து நிலையத்திலிருந்து கோவை, கரூர், பழனி , மதுரை போன்ற மாவட்டங்களுக்கு செல்லும் சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags

Next Story
why is ai important to the future