ஈரோடு மாட்டு சந்தையில் விற்பனை சரிவு

ஈரோடு மாட்டு சந்தையில் விற்பனை சரிவு
X

ஈரோடு மாட்டு சந்தையில் வெளிமாநில வியாபாரிகள் வருகை குறைவால் விற்பனையும் குறைந்தது.

ஈரோடு கருங்கல்பாளையம் சோதனை சாவடி அருகே வியாழக்கிழமை தோறும் மாட்டு சந்தை கூடும். இந்த சந்தைக்கு ஈரோடு மற்றும் சுற்றுப்புற பகுதிகள், சேலம், நாமக்கல், கரூர் போன்ற பகுதிகளில் இருந்து மாடுகள் வரத்தாகும். இந்த மாடுகளை கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா போன்ற வெளி மாநிலத்தை சேர்ந்த வியாபாரிகள் அதிகளவில் வந்து வாங்கி செல்வது வழக்கம். இந்நிலையில், நேற்று கூடிய மாட்டு சந்தையில் கடந்த வாரத்தை போலவே பசு-500, எருமை-250, கன்று-100 என 850 மாடுகள் வரத்தானது.

இதில், பசு மாடு ரூ.30ஆயிரம் முதல் ரூ.70ஆயிரம் வரையும், எருமை மாடு ரூ.30 ஆயிரம் முதல் ரூ.45ஆயிரம் வரையும், கன்று ரூ.10ஆயிரம் முதல் ரூ.15ஆயிரம் வரையும் விற்பனை செய்யப்பட்டன. ஆனால், கேரளா, கர்நாடகா போன்ற வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் சந்தைக்கு குறைவான எண்ணிக்கையிலேயே வந்து மாடுகளை வாங்கி சென்றனர். இதனால், சந்தையில் 70சதவீதம் அளவே மாடுகள் விற்பனையானதால், மாட்டு வியாபாரிகள் கவலையடைந்தனர் என மாட்டு சந்தை நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!