தைப்பூசம் முடிந்தும் பாதயாத்திரை செல்லும் பக்தர்கள்

தைப்பூசம் முடிந்தும் பாதயாத்திரை செல்லும் பக்தர்கள்
X

தைப்பூசம் முடிந்த பிறகும் பழனி முருகன் கோவிலுக்கு ஈரோட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக சென்று வருகின்றனர்.

ஒவ்வொரு வருடமும் தை பூசத்தன்று பழனி முருகன் கோவிலுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் பாதயாத்திரையாக சென்று வழிபடுவது வழக்கம். அதேபோல் இந்த வருடமும் கடந்த 28ஆம் தேதி தைப்பூச விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி பழனி முருகன் கோவிலுக்கு தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான மக்கள் விரதமிருந்து இரவு பகல் முழுவதும் பாதயாத்திரையாக செல்வார்கள். ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் பழனிக்கு பாதயாத்திரையாக சென்று வருகின்றனர்.

பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு ஆங்காங்கே தன்னார்வலர்கள், அரசியல் கட்சியினர் உணவு, தண்ணீர் வழங்கி வருகின்றனர். கடந்த வருடம் பழனிக்கு செல்லும் பக்தர்களுக்கு காவல்துறை சார்பில் விபத்துக்களை தவிர்க்கும் வகையில் ஒளிரும் ஸ்டிக்கர், ஒளிரும் பட்டை வழங்கப்பட்டது. இந்நிலையில் தைப்பூசம் முடிந்த பிறகும் பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஈரோடு வழியாக 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பாதயாத்திரையாக சென்று கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக சேலம் மாவட்டம் எடப்பாடியில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக பழனிக்கு நடந்து சென்றனர். அவர்களுக்கு தேவையான உணவு, தண்ணீர் பாக்கெட்டை தன்னார்வலர்கள் வழங்கினர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!