தீ விபத்து- பல லட்சம் மதிப்புள்ள பஞ்சுகள் எரிந்து நாசம்

தீ விபத்து- பல லட்சம் மதிப்புள்ள பஞ்சுகள் எரிந்து நாசம்
X

ஈரோடு அருகே பஞ்சு குடோனில் தீ விபத்து ஏற்பட்டதில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான பஞ்சுகள் தீயில் எரிந்து சேதமடைந்தன.

ஈரோடை அடுத்துள்ள சித்தோடு பசுவபட்டி பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ். இவர் அதே பகுதியில் கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக பஞ்சு தயாரிக்கும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் இன்று அதிகாலை அவரது குடோனில் இருந்து தீயுடன் கூடிய புகை எழும்புவதை பார்த்த ஊழியர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதையடுத்து பவானி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பவானி தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்து அணைத்தனர்.

இருப்பினும் பனியன் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட பல லட்ச ரூபாய் மதிப்பிலான பஞ்சுகள் தீயில் எரிந்து சேதமடைந்தன. இது குறித்து தீயணைப்பு துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு மூலமாக தீ விபத்து நடந்திருக்க கூடும் என தெரிய வந்துள்ளது. மேலும் இச்சம்பவம் தொடர்பாக சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
ஈரோடு: ஓட்டு எண்ணும் மையத்தில் ஐந்து அடுக்கு உச்ச பாதுகாப்பு..!