ஈரோட்டில் ரூ.8.78 கோடிக்கு மது விற்பனை
ஈரோடு மாவட்டம் முழுவதும் 214 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது. இது சாதாரண நாட்களில் நாள் ஒன்றுக்கு ரூ.3 கோடி முதல் ரூ.4 கோடி வரை மதுபானங்கள் விற்பனையாவது வழக்கம். ஆனால் தீபாவளி, புதுவருடம், பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் மதுபானங்கள் ரூ.6 கோடி வரை விற்பனையாகும். மது பிரியர்கள் தங்களுக்குத் தேவையான மது வகைகளை வாங்கி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
அதன்படி நேற்று பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதையொட்டி நேற்று முன்தினம் மாலை முதல் இரவு வரை அனைத்து மதுக்கடைகளையும் மது பிரியர்கள் கூட்டம் அதிகமாகவே இருந்தது. மது பிரியர்கள் போட்டி போட்டுக்கொண்டு மதுவகைகளை அள்ளிச் சென்றனர். குறிப்பாக பீர் வகை மதுபானங்கள் அதிகளவு விற்பனையாகின. பொங்கலை ஒட்டி தொடர் விடுமுறை வருவதால் தங்களுக்கு வேண்டிய மதுவகைகளை மது பிரியர்கள் அள்ளிச் சென்றனர். இந்த வருடம் பொங்கல் அன்று மட்டும் ஈரோடு மாவட்டம் முழுவதும் 8 கோடியே 78 லட்சத்து 77 ஆயிரத்து 770 ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனை ஆகியுள்ளது. இது கடந்த ஆண்டை விட ஒன்றரை கோடி ரூபாய் கூடுதல் ஆகும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu