ஈரோட்டில் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு ரத்து

ஈரோட்டில் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு ரத்து
X
கொரோனா தாக்கம் காரணமாக, இந்த வருடம் ஜல்லிக்கட்டு போட்டி ரத்து செய்யப்பட்டதாக ஜல்லிக்கட்டு பேரவையினர் தெரிவித்துள்ளனர்.

பொங்கல் பண்டிகை என்றாலே தமிழரின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி தான் அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வரும். பொங்கல் பண்டிகையை ஒட்டி தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். குறிப்பாக மதுரை அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டி உலக புகழ் பெற்றது.

இதன்படி ஈரோட்டில் ஜல்லிக்கட்டு பேரவை தொடங்கப்பட்டு கடந்த 2018ஆம் ஆண்டு முதன் முதலாக ஈரோடு அடுத்த பவளத்தாம்பாளையத்தில் ஏ .இ .டி பள்ளி மைதானத்தில் பிரம்மாண்ட முறையில் நடந்தது. அதைத்தொடர்ந்து கடந்த 2019ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. இதில் தமிழ்நாட்டில் இருந்து மொத்தம் 523 காளைகள் பங்கேற்றன. ஆயிரக்கணக்கான மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர். சிறந்த மாடுபிடி வீரர்கள் மோட்டார் சைக்கிள் பரிசாக வழங்கப்பட்டது.

இந்நிலையில் இந்த வருடம் பொங்கலை ஒட்டி மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. இன்று மதுரை பாலமேடு பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. இதைப் போல் இந்த வருடமும் ஈரோட்டில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் கொரோனா தாக்கம் காரணமாக இந்த வருடம் ஜல்லிக்கட்டு போட்டி ரத்து செய்யப்பட்டதாக ஜல்லிக்கட்டு பேரவையினர் தெரிவித்துள்ளனர். ஆனால் அடுத்த வருடம் கண்டிப்பாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் என்றும் தெரிவித்தனர்.

Tags

Next Story
Will AI Replace Web Developers