/* */

ஈரோடு: மாநகராட்சி, 4 நகராட்சி , 42 பேரூராட்சிகளில் வாக்காளர் பட்டியல் வெளியீடு

நகர்புற உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடு ஈரோடு மாநகராட்சி 4 நகராட்சி , 42 பேரூராட்சிகளில் வாக்காளர் பட்டியல் வெளியீடு.

HIGHLIGHTS

ஈரோடு: மாநகராட்சி, 4 நகராட்சி , 42 பேரூராட்சிகளில் வாக்காளர் பட்டியல் வெளியீடு
X

பைல் படம்.

நகர்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடக்க உள்ள நிலையில், ஈரோடு மாவட்டத்தில் உள்ள 42 பேரூராட்சிகளில், ஆண்கள்-25, பெண்கள்-25, இருபாலர்-605 என 655 ஓட்டுச்சாவடி அமைகிறது. ஆண்கள் 1 லட்சத்து 93 ஆயிரத்து 816, பெண்கள் 2 லட்சத்து 7 ஆயிரத்து 708, திருநங்கைகள் 14 என 4 லட்சத்து ஆயிரத்து, 538 வாக்காளர்கள் உள்ளனர். இவை அனைத்திலும் சேர்த்து 1,251 ஓட்டுச்சாவடிகளில் 4 லட்சத்து 72 ஆயிரத்து, 213 ஆண்கள், 5 லட்சத்து, 296 பெண்கள், 66 திருநங்கைகள் என 9 லட்சத்து 72 ஆயிரத்து 575 பேர் வாக்களிக்க உள்ளனர்.

ஈரோடு மாநகராட்சி:

மாநகராட்சியில் ஆண்கள் 127, பெண்கள்-127, பொது-189 என 443 ஓட்டுச்சாவடி அமைகிறது. ஆண்கள் 2 லட்சத்து 17 ஆயிரத்து, 364, பெண்கள் 2 லட்சத்து 25 ஆயிரத்து 785, திருநங்கைகள் 42 என 4 லட்சத்து 43 ஆயிரத்து 191 வாக்காளர்கள் உள்ளனர்.

பவானி :

பவானி நகராட்சியில் ஆண்கள் - 9 , பெண்கள் - 9, இருபாலர்-18 என 36 ஓட்டுச்சாவடி அமைகிறது. 14 ஆயிரத்து 502 ஆண், 15 ஆயிரத்து 780 பெண் என 30 ஆயிரத்து 282 வாக்காளர்கள் உள்ளனர்.

கோபிச்செட்டிப்பாளையம் :

கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் ஆண்கள்-29, பெண்கள்-29, இருபாலர்-1 என 59 ஓட்டுச்சாவடி அமைகிறது. ஆண்கள்-22 ஆயிரத்து 522, பெண்கள்-25 ஆயிரத்து, 22, திருநங்கை-1 என 47 ஆயிரத்து 545 வாக்காளர்கள் உள்ளனர்.

புளியம்பட்டி:

புஞ்சை புளியம்பட்டி நகராட்சியில் ஆண்கள்-1, பெண்கள்-1, இருபாலர் - 17 என 19 ஓட்டுச்சாவடி அமைகிறது. ஆண்கள்-8 ஆயிரத்து 98, பெண்கள்-8 ஆயிரத்து, 833, இருபாலர்-2 என 16 ஆயிரத்து 933 வாக்காளர்கள் உள்ளனர்.

சத்தியமங்கலம்:

சத்தியமங்கலம் நகராட்சியில் ஆண்கள்-12, பெண்கள் - 12 , இருபாலர்-15 என 39 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. ஆண்கள்-15 ஆயிரத்து 911, பெண்கள்-17 ஆயிரத்து, 168, திருநங்கைகள்-7 என 33 ஆயிரத்து, 86 வாக்காளர்கள் உள்ளனர்.

Updated On: 10 Dec 2021 10:15 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    பழுக்க கொட்டப்பட்ட அனல் கங்கின் மேல் தீமிதித்த பக்தர்கள்!#devotional...
  2. ஆன்மீகம்
    நம் கஷ்டங்களை நீக்கும் சக்தி யாரிடம் உள்ளது..!
  3. வீடியோ
    மயிலாடுதுறையில் முதலிடம் பெற்ற மாணவி பகிர்ந்த வெற்றியின் ரகசியம்...
  4. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் 78 விமானங்கள் திடீர் ரத்து! காரணம் இது தானாம்!
  5. சினிமா
    இன்றும் என்றும் எப்போதும் நடிகை திரிஷா மட்டுமே ராணி..!
  6. அரசியல்
    எடப்பாடிக்கு எதிராக அ.தி.மு.க.,வில் புது அணி..!
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. இந்தியா
    கேரளாவில் 'நைல் காய்ச்சல்' பரவல்! 10 பேருக்கு பாதிப்பு!
  10. வணிகம்
    இப்ப தங்கம் வாங்கலாமா? விலை உயருமா..?குறையுமா..?