ஈரோடு: காவல்துறையில் பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் ஏலம்

கோப்பு படம்.
இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி.சசிமோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் காவல் நிலைய சரகங்களில் உரிமை கோரப்படாமல் கேட்பாரற்று இருந்த, 419 இருசக்கர வாகனங்கள் 3 நான்கு சக்கர வாகனங்கள் என மொத்தம் 422 வாகனங்களை உள்ளன. இவை வரும் 16ஆம் தேதி காலை 10 மணிக்கு 46 புதூர் ஆயுதப்படை மைதானத்தில் பொது ஏலத்தில் விட அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஈரோடு மாவட்ட காவல்துறையினரால் பயன்படுத்தப்பட்ட 68 இருசக்கர வாகனங்கள் 10 நான்கு சக்கர வாகனங்கள் என மொத்தம் 78 வாகனங்கள் அதேபோல், மதுவிலக்கு குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட ஏலம் விடப்பட்டு நிலுவையில் உள்ள 6 நான்கு சக்கர வாகனங்கள் 8 இருசக்கர வாகனங்கள் ஆக மொத்தம் 14 வாகனங்களையும் அன்றைய தினத்தில் பொது ஏலத்தில் விட அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறாக மொத்தம் 495 இருசக்கர வாகனங்கள் மற்றும் 19 நான்கு சக்கர வாகனங்கள் ஆக மொத்தம் 514 வாகனங்களை வரும் 14ஆம் தேதி முதல் 16ஆம் தேதி காலை 10 மணி வரை நேரில் பார்வையிடலாம்.
வாகனங்களை ஏலம் எடுப்பவர்கள், இரு சக்கர வாகனத்திற்கு ரூ.2000/-ம், நான்கு சக்கர வாகனத்திற்கு ரூ.5000/-ம் பொது ஏலம் நடத்தும் இடத்தில் முன்பணம் செலுத்துபவர்கள் மட்டுமே, ஏலத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கபடுவர். வாகனத்தினை ஏலம் எடுத்தவுடன் ஏலத்தொகை மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி முழுவதையும் செலுத்தி அப்போதே வாகனத்தினைப் பெற்றுக் கொள்ளவேண்டும். ஏலம் முடிந்தபிறகு வைப்பு தொகை திருப்பி அவர்களிடமே கொடுக்கப்படும். மேலும் விபரங்களுக்கு காவல் துணைக் கண்காணிப்பாளர், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு, ஈரோடு மாவட்டம் அவர்களின் அலுவலகத்தினை நேரடியாகவோ, 9443329105 என்ற தொலைபேசி மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu