சிறுமி கருமுட்டை விவகாரம்; ஈரோடு சுதா மருத்துவமனைக்கு சீல் வைப்பு.!
சுதா மருத்துவமனைக்கு சீல் வைத்த சுகாதாரத்துறை அதிகாரிகள்.
Sudha Hospital Erode- 16 வயது சிறுமியின் கருமுட்டை விற்பனை செய்த விவகாரத்தில் ஈரோட்டில் சுதா மருத்துவமனை பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளானது.மருத்துவமனையின் ஸ்கேன் சென்டருக்கு சீல் வைத்த நிலையில் நீதிமன்றத்தில் மருத்துவமனை நிர்வாகம் தடைக்கு விளக்கு பெற்று மருத்துவமனையை இயக்கி வந்தது. ஆனால் சென்னை உயர்நீதிமன்றம் மருத்துவமனை முழுமைக்கும் சீல் வைக்க நேற்று முன்தினம் உத்தரவிட்டது.
அதனைத்தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு சுதா மருத்துவமனைக்கு சீல் வைப்பதற்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் இணை இயக்குனர் பிரேம குமாரி தலைமையிலான அதிகாரிகள் முயன்றனர்.ஆனால் மருத்துவமனையில் 95க்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வந்ததால், அவர்களை வெளியேற்ற மருத்துவமனை நிர்வாகம் கேட்டதை அடுத்து ஒரு நாள் அவகாசம் வழங்கினார்.
பின்னர், நீதிமன்ற உத்தரவின் படி ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையின் இணை இயக்குனர் பிரேம குமாரி தலைமையிலான அரசு அதிகாரிகள், முதற்கட்டமாக சுதா மருத்துவமனையின் 3 ஸ்கேன் சென்டருக்கும், 10 ஸ்கேன் இயந்திரங்களுக்கும் நேற்று முன்தினம் இரவு அதாவது சனிக்கிழமையன்று இரண்டாவது முறையாக சீல் வைத்தனர்.
தொடர்ந்து, சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் வேறு மருத்துவமனைகளுக்கு மாற்றம் செய்யப்பட்டதையடுத்து, நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை சுதா மகப்பேறு மருத்துவமனை, குழந்தைகள் நல மருத்துவமனை உள்ளிட்ட பல துறை மருத்துவமனைகளுக்கு என ஓட்டு மொத்த மருத்துவமனையையும் மூடி சுகாதாரத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu