ஈரோடு மாவட்டத்தில் 56.6 மி.மீட்டர் மழை பொழிவானதாக பதிவு

ஈரோடு மாவட்டத்தில்  56.6 மி.மீட்டர் மழை பொழிவானதாக  பதிவு
X

மழை

ஈரோடு மாவட்டத்தில் நேற்று 56.6 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக ஒரு சில மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.இந்த நிலையில், ஈரோடு மாநகரில் நேற்று மாலை வானில் கருமேகங்கள் சூழ்ந்து பரவலாக மழை பெய்தது. இதேபோல் மாவட்டத்தின் ஒரு சில இடங்களிலும் லேசான மழை பெய்தது. இதில், மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு: ஈரோடு - 8 , பெருந்துறை - 11, தாளவாடி - 1.4, பவானி - 4.2, சென்னிமலை - 5, மொடக்குறிச்சி - 27 என மாவட்டத்தில் மொத்தம் 56.6 மி.மீட்டர் மழை பெய்தது.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது