ஈரோடு மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் அளவு விவரம்

ஈரோடு மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் அளவு விவரம்
X

பைல் படம்

ஈரோடு மாவட்டத்தில் நேற்று 54.8 மி.மீ மழை பதிவாகியுள்ளதாக பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக சூறாவளி காற்றுடன் கூடிய கோடை மழை பெய்து வருகிறது.‌ மாவட்டத்தில் நேற்று காலை முதல் மாலை வரை வழக்கம் போல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்நிலையில் மாலை நேரத்தில் பல்வேறு இடங்களில் சூறாவளி காற்றுடன் கோடை மழை கொட்டியது.இதனால் பல்வேறு இடங்களில் மின்தடை ஏற்பட்டது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது. பல்வேறு இடங்களில் சாலைகளில் மரங்கள் சரிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது

மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் அளவு விவரம் பின்வருமாறு:-

கோபிசெட்டிபாளையம் - 9.6 மி.மீ

சென்னிமலை - 14.0 மி.மீ

மொடக்குறிச்சி - 26.0 மி.மீ

குண்டேரிப்பள்ளம் - 1.2 மி.மீ

வரட்டுப்பள்ளம் - 4.0 மி.மீ

மாவட்டத்தில் மொத்த மழைப்பொழிவு - 54.8 மி.மீ

மாவட்டத்தில் சராசரி மழைப்பொழிவு - 3.2 மி.மீ

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு