ஈரோடு மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் 503.30 மி.மீ மழை பதிவு

ஈரோடு மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் 503.30 மி.மீ மழை பதிவு
X

மழை (பைல் படம்).

ஈரோடு மாவட்டத்தில் புதன்கிழமை (நேற்று) ஒரே நாளில் 503.30 மில்லி மீட்டா் மழை பெய்தது.

ஈரோடு மாவட்டத்தில் புதன்கிழமை (நேற்று) ஒரே நாளில் 503.30 மில்லி மீட்டா் மழை பெய்தது.

ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக புதன்கிழமை (நேற்று) மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்தது. குறிப்பாக நம்பியூர், கொடுமுடி, பவானிசாகர், தாளவாடி ஆகிய பகுதிகளில் கன மழை பெய்தது.

இந்த மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. மழையை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது. மாவட்டத்தில் அதிகபட்சமாக நம்பியூர் பகுதியில் 123.00 மி.மீ மழை பெய்தது.

மாவட்டத்தில் நேற்று (நவ.8) புதன்கிழமை காலை 8 மணி முதல் இன்று (நவ.9) வியாழக்கிழமை காலை 8 மணி வரை பெய்த மழையின் அளவு விவரம் மில்லி மீட்டரில் பின்வருமாறு:-

மொடக்குறிச்சி - 1.00 மி.மீ ,

கொடுமுடி - 62.00 மி.மீ ,

பெருந்துறை - 9.00 மி.மீ ,

சென்னிமலை - 6.00 மி.மீ ,

அம்மாபேட்டை - 5.00 மி.மீ ,

வரட்டுப்பள்ளம் அணை - 21.20 மி.மீ ,

கோபிச்செட்டிப்பாளையம் - 10.20 மி.மீ ,

எலந்தகுட்டைமேடு - 18.40 மி.மீ ,

கொடிவேரி - 12.00 மி.மீ ,

குண்டேரிப்பள்ளம் - 56.30 மி.மீ ,

நம்பியூர் - 123.00 மி.மீ ,

சத்தியமங்கலம் - 43.00 மி.மீ ,

பவானிசாகர் அணை - 92.00 மி.மீ ,

தாளவாடி - 44.20 மி.மீ ,

மாவட்டத்தில் மொத்த மழைப்பொழிவு - 503.30 மி.மீ ஆகவும், சராசரியாக 29.61 மி.மீ ஆகவும் மழையளவு பதிவாகி உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!