ஈரோடு மாவட்டம் முழுவதும் கொட்டி தீர்த்த மழை; ஒரே நாளில் 872 மி.மீ பதிவு

ஈரோடு மாவட்டம் முழுவதும் கொட்டி தீர்த்த மழை; ஒரே நாளில் 872 மி.மீ பதிவு
X

மழை (பைல் படம்).

ஈரோடு மாவட்டம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 872.20 மி.மீ மழை கொட்டி தீர்த்தது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 872.20 மி.மீ மழை கொட்டி தீர்த்தது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கியது. இதனையடுத்து தமிழகத்தின் 30 மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. வானிலை மைய அறிவிப்பின்படி, ஈரோடு மாவட்டத்தில் கடந்த திங்கட்கிழமை (அக்.30) முதல் மாலை மற்றும் இரவு நேரங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது.

அதன்படி, சனிக்கிழமை (நவ.4) நேற்று மாலை முதல் இரவு வரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. அதிகப்பட்சமாக எலந்தகுட்டைமேடு பகுதியில் 88 மி.மீ மழைப்பொழிவு பதிவானது. மேலும், கொட்டி தீர்த்து வரும் மழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் குளு குளு சீசன் நிலவுகிறது.

மாவட்டத்தில் நேற்று (நவ.4) சனிக்கிழமை காலை 8 மணி முதல் இன்று (நவ.5) ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி வரை பெய்த மழையின் அளவு விவரம் மில்லி மீட்டரில் பின்வருமாறு:-

ஈரோடு - 44.00 மி.மீ ,

மொடக்குறிச்சி - 70.00 மி.மீ ,

கொடுமுடி - 40.00 மி.மீ ,

பெருந்துறை - 49.00 மி.மீ ,

சென்னிமலை - 12.00 மி.மீ ,

பவானி - 72.00 மி.மீ ,

கவுந்தப்பாடி - 34.00 மி.மீ ,

அம்மாபேட்டை -36.20 மி.மீ ,

வரட்டுப்பள்ளம் அணை - 55.20 மி.மீ ,

கோபி - 61.20 மி.மீ ,

எலந்தகுட்டைமேடு - 88.00 மி.மீ ,

கொடிவேரி - 56.00 மி.மீ ,

குண்டேரிப்பள்ளம் - 68.80 மி.மீ ,

நம்பியூர் - 61.00 மி.மீ ,

சத்தியமங்கலம் - 53.00 மி.மீ ,

பவானிசாகர் - 47.40 மி.மீ ,

தாளவாடி - 24.40 மி.மீ ,

மாவட்டத்தில் மொத்த மழைப்பொழிவு 872.20 மி.மீ ஆகவும், சராசரியாக 51.31 மி.மீ ஆகவும் பதிவாகி உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags

Next Story
டெல்லி டூ அமெரிக்கா அரை மணி நேரத்துலயா? என்னப்பா சொல்ற எலான் மஸ்க்..! | Delhi to America Flight Timings