Erode District Power Shutdown | ஈரோடு மாவட்டத்தில் நாளை (அக்.26) மின்தடை

மின்தடை (பைல் படம்).
ஈரோடு மாவட்டத்தில், நாளை (அக்டோபர் 26) வியாழக்கிழமை மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து, மின்வாரியம் அறிவித்துள்ளது.
ஈரோடு மாவட்டத்தில், நாளை (அக்டோபர் 26) வியாழக்கிழமை மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால், நாளை கீழ்கண்ட இந்தப் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காசிபாளையம் துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை):-
மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- சூரம்பட்டி, அணைக்கட்டு சாலை, சங்கு நகர், சேரன் நகர், மாதவி வீதி, டாக்டர் ராதா கிருஷ்ணன் சாலை, கோவலன் வீதி, காமராஜர் வீதி 1, 2, 3, நேரு வீதி, தாதுக்காடு, நேதாஜி வீதி 1, 2, 3, சாஸ்திரி சாலை 1, 2, ரயில் நகர், கே.கே.நகர், சென்னிமலை சாலை, ரங்கம்பாளையம், இரணியன் வீதி, பெரியசடையம்பாளையம், சிவம் நகர், அண்ணா நகர், சேனாதிபதிபாளையம், சிட்கோ தொழிற்பேட்டை, காசி பாளையம், சாஸ்திரி நகர், ஜீவா நகர், மூலப்பாளையம், நாடார் மேடு, கொல்லம்பாளையம், பச்சப்பாளி, செந்தில் நகர், காந்திஜி சாலை, ஈ.வி.என்.சாலை, முத்தம்பாளையம் வீட்டு வசதி வாரிய குடியிருப்புப் பகுதி 1 முதல் 8 வரை, அம்பிகை நகர், அன்னை நகர், நல்லியம்பாளையம், பாலாஜி நகர், ஜீவானந்தம் சாலை, தங்கபெருமாள் வீதி, ஈஸ்வரன்பிள்ளை வீதி, கள்ளுக்கடைமேடு மற்றும் பழைய ரயில் நிலையம் பகுதி.
ஈங்கூர் துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை):-
மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- பெருந்துறை தெற்குப் பகுதி, கொங்கு கல்லூரி பகுதி, நந்தா கல்லூரி பகுதி, மூலக்கரை, வெள்ளோடு, கவுண்டச்சிபாளையம், ஈங்கூர், பாலப்பாளையம், மு.பிடாரியூர் வடக்குப் பகுதி, வேலாயுதம்பாளையம், 1010 நெசவாளர் காலனி, தோப்புபாளையம், பெருந்துறை ஆர்.எஸ் மற்றும் பெருந்துறை வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு.
தாளவாடி துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை):-
மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- தாளவாடி, தொட்டகாஜனூர், மல்லன்குழி, சூசையபுரம், சிமிட்டஹள்ளி, காமயன்புரம், கெட்டவாடி, அருள்வாடி மற்றும் தலமலை ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu