ஈரோடு: புஞ்சைபுளியம்பட்டி பகுதியில் நாளை மின் வினியாேகம் நிறுத்தம்

ஈரோடு: புஞ்சைபுளியம்பட்டி பகுதியில் நாளை மின் வினியாேகம் நிறுத்தம்
X

பைல் படம்

பவானிசாகர் அருகே உள்ள புஞ்சை புளியம்பட்டி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை வியாழக்கிழமை நடைபெற உள்ளது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த புஞ்சைபுளியம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

இதனால் புஞ்சைபுளியம்பட்டி, ஆம்போதி, ஆலந்தூர், காராப்பாடி, கணுவக்கரை, நல்லூர், செல்லப்பம்பாளையம், ஆலாம்பாளையம், ராமநாதபுரம், கள்ளிப்பாளையம், மாதம்பாளையம், பொன்னம்பாளையம், வேங்கநாயக்கன்பாளையம் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணியில் இருந்து மதியம் 2 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது. இந்த தகவலை சத்தியமங்கலம் மின்சார வாரிய செயற்பொறியாளர் குலசேகரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!