ஈரோட்டில் கால்நடை பராமரிப்பு உதவியாளர் நேர்காணல் ஒத்திவைப்பு: கலெக்டர் தகவல்

ஈரோட்டில் கால்நடை பராமரிப்பு உதவியாளர் நேர்காணல் ஒத்திவைப்பு: கலெக்டர் தகவல்
X

ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி.

ஈரோட்டில் கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கான நேர்காணல் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு கொரோனா தொற்று பரவலை தடுக்கும் நடவடிக்கையை தீவிரப்படுத்தி வருகிறது. இதற்காக நடைமுறையில் உள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டு உள்ளது. வருகிற 10-ந்தேதி வரை சமுதாய கலாசார மற்றும் அரசியல் கூட்டங்களை நடத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.

இந்தநிலையில், கால்நடை பராமரிப்பு உதவியாளர் பதவிக்கான காலிப்பணியிடங்களை நிரப்பும் வகையில், வருகிற 6-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை நேர்காணல் நடத்த முடிவு செய்யப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது. இந்த நேர்காணலில் பெரும் எண்ணிக்கையிலான விண்ணப்பதாரர்கள் மற்றும் பொதுமக்கள் ஒரே இடத்தில் கூட வாய்ப்பு உள்ளதால் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு மறு உத்தரவு வழங்கும் வரை நேர்காணல் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாக சென்னை கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவ பணிகள் இயக்குனர் தெரிவித்து உள்ளார்.

எனவே ஈரோடு மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் நடைபெற இருந்த நேர்காணல் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுகிறது.இந்த தகவலை ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்து உள்ளார்.

Tags

Next Story
ai marketing future